SKIP TO MAIN CONTENT

உங்களுக்கு எத்தனை demerit புள்ளிகள் உள்ளன என்பதை எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் எத்தனை demerit புள்ளிகள் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வாறு சரிபார்க்கலாம் என்ற விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

Penalty Money
Money for a traffic infringement. Not a real document. Source: Getty / Getty Images

2 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலியாவில் முழு ஓட்டுநர் உரிமம்- லைசன்ஸ் பெற்ற எந்தவொரு ஓட்டுநருக்கும், பொதுவாக 3 ஆண்டுகளுக்கு 12 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இது 13 புள்ளிகளாக காணப்படுகின்றது.

குறித்த ஓட்டுநர் சாலை விதிமீறல்களில் ஈடுபடும்போது, இந்தப் புள்ளிகள் demerit -மறைபுள்ளிகளாக அவரது ஓட்டுநர் உரிமத்தில் சேர்க்கப்படும். அவை குற்றம் நடந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு அவரது உரிமத்தில் இருக்கும்.

அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல சாலை விதிமீறல்களுக்கு demerit புள்ளிகள் தண்டனையாக வழங்கப்படும்.

ஒரு ஓட்டுநர் தனக்குரிய மொத்தப்புள்ளிகளை மூன்று ஆண்டுகளுக்குள் இழந்துவிட்டாரென்றால், அவரால் தொடர்ந்து வாகனம் ஓட்டமுடியாது.

இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உங்கள் தற்போதைய ஓட்டுநர் உரிமத்தில் எத்தனை demerit புள்ளிகள் இருக்கின்றன என்பதை பின்வரும் வழிகளில் கண்டறியலாம்:

நியூ சவுத் வேல்ஸ்- MyServiceNSW portal

விக்டோரியா - MyVicRoads account

தெற்கு ஆஸ்திரேலியா- My SAVGOV portal

குயின்ஸ்லாந்து- TMR (Transport and Main Roads) portal அல்லது QGov இணையத்தளம்

டஸ்மேனியா- Service Tasmania-வை 1300 13 55 13 என்ற எண்ணில் அழைக்கவும்.

ACT - நீங்கள் ACT search of records application form-ஐப் பூர்த்தி செய்ய வேண்டும், இரண்டு வகையான அடையாளச் சான்றுகளை வழங்க வேண்டும் மற்றும் $27.60 கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

NT- MVR (Motor Vehicle Registry) இணையத்தளத்தில் ஒரு படிவத்தைச் சமர்ப்பிக்கலாம் அல்லது 1300 654 628 என்ற எண்ணை அழைக்கலாம். இந்தச் சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.

மேற்கு ஆஸ்திரேலியா- உங்கள் demerit புள்ளிகளை சரிபார்க்க, Driver's Demerit Points Enquiry படிவத்தை போக்குவரத்துத் துறையின் DOT Direct இணையத்தளத்தில் சமர்ப்பிக்கவும்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது

tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now