விக்டோரியா மாநில வாகன ஓட்டிகள் தங்களது ஓட்டுநர் உரிமம்-லைசன்ஸை, டிஜிட்டல் வடிவில் தங்கள் கைபேசியில் எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் ஆறு மாத பரீட்சார்த்த முயற்சி மாநிலத்தின் regional பகுதிகளில் முதலில் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த ஆண்டளவில் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்படி முதற்கட்டமாக Ballarat-இல் வசிக்கும், முழு வாகன ஓட்டுநர் உரிமம்(full licence) வைத்திருப்பவர்கள், ஜூன் மாதம்முதல் இப்பரீட்சார்த்த முயற்சியில் பங்கேற்பதற்கு பதிவு செய்ய முடியும்.
ஓட்டுநர்கள் தங்கள் டிஜிட்டல் லைசன்ஸை, service Victoria App-இல் சேர்த்துவைக்க முடியும் எனவும், வழக்கம்போல தங்கள் லைசன்ஸ் அட்டையை பயன்படுத்த விரும்புபவர்கள் தொடர்ந்தும் அதனையே பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 இன் பிற்பகுதியில் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தெற்கு ஆஸ்திரேலியாவாகும், அதைத் தொடர்ந்து NSW மாநிலம் 2019 இன் பிற்பகுதியில் இந்த முறையை செயல்படுத்தியது. இதையடுத்து குயின்ஸ்லாந்து அரசும் பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் நான்காவது மாநிலமாக விக்டோரியா இணைந்துகொள்கிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
