மெல்பனின் Sunbury அருகே இன்று மே 28 ஞாயிற்றுக்கிழமை இரவு நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் இரவு 11.40 மணியளவில் ஏற்பட்டதாக பரவலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
