SKIP TO MAIN CONTENT

கடைகளில் சாப்பாடு வாங்குவோர் கவனத்திற்கு! உணவு விலை அதிகரிப்பு!!

representational Image.
representational Image. Source: EyeEm: Getty Images

3 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலிய வணிகங்கள் மீது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தின் பின்விளைவாக, hospitality-விருந்தோம்பல்துறையில் உணவுப்பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.

சில வணிகங்கள் விலை அதிகரிப்பை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ள அதேநேரம், மேலும் பல வணிகங்கள் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக விருந்தோம்பல்துறையில் பணிபுரிவதற்கு போதுமான தொழிலாளர்கள் இல்லாமை போன்ற காரணங்களால், உணவு விலைகளை அதிகரிக்கவேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் உணவு விலை தற்போது உள்ளதைவிட சுமார் 20 வீதத்தினால் அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமல்லாமல், நாடாளாவிய ரீதியில் இவ்விலை அதிகரிப்பு இடம்பெற ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்காலிக விசாவில் வாழ்ந்துவந்த பல பணியாளர்கள் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்டதால் விருந்தோம்பல் துறையில் பணிபுரிவதற்கான வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளதாக  Restaurant and Catering Industry Association தெரிவித்துள்ளது.

குறிப்பாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் வேலை வெற்றிடங்கள் விருந்தோம்பல்துறையில் தற்போது உள்ளதாக Restaurant and Catering Industry Association கூறியுள்ளது.

மேலும் குறைந்தளவானோரே வேலையில் இருப்பதால் அவர்களுக்கான ஊதியம் அதிகளவில் தரப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலை காரணமாக, அடுத்த ஆண்டு, உணவகங்கள் மற்றும் கடைகளில் உணவு வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்கள், menu-  உணவுப்பட்டியலிலுள்ளவற்றைத் தெரிவுசெய்யும்போது, அதிகளவான பணத்தை செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now