SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய வானில் இன்று தோன்றும் ‘இரத்த நிலா’

2022-11-08_11-24-25.jpg
Credit: Nasa

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலிய வானில் இன்று இரவு முழு சந்திர கிரகணம் 'blood moon’ பிரமாண்டமாக காட்சியளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது முழு சந்திர கிரகணம் இதுவாகும்.

முதலாவது முழு சந்திர கிரகணம் மே மாதம் இடம்பெற்றிருந்தபோதும், அது ஆஸ்திரேலியாவில் பகல் நேரத்தில் நடந்ததால் அதனை பார்க்கமுடியாமல்போனது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வாகவும்.

இந்த முழு சந்திர கிரகணத்தின் போது நிலவு கூடுதல் ஒளியுடன் இரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிர்வதனால் இதனை இரத்த நிலா என அழைக்கிறார்கள்.

இன்று வானில் தெரிய இருக்கும் இந்த ‘‘இரத்த நிலவை" ACT, Northern Territory மற்றும் விக்டோரியா, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ்,மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா,  டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் கீழ்க்காணும் நேரங்களில் பார்வையிடலாம்.

2022-11-08_11-07-05.jpg

சூரியன் மற்றும் சந்திரனின் நிலை காரணமாக அடுத்த முழு சந்திர கிரகணம் 2025 வரை நிகழாது. இருப்பினும், இதற்கிடையில் ஏராளமான பகுதியளவான சந்திர கிரகணங்கள் நிகழும்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now