இந்தியா ஆக்ராவைச் சேர்ந்த Shubham Garg என்ற 28 வயது மாணவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும், இவர் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் சிட்னி வந்து தனது PhD படிப்பை University of South Wales-இல் மேற்கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 6ம்திகதி வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் Pacific Highway Lane Cove அருகே Gatacre Avenue-இல் வைத்து, நபர் ஒருவர் குறித்த மாணவரை பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் மறுத்ததையடுத்து பல தடவைகள் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து இந்த மாணவர் அருகிலிருந்த வீடொன்றிலிருந்தவர்களின் உதவியுடன், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு ஆபத்தானநிலையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.
இந்நிலையில் குறித்த மாணவரைப் பராமரிக்கும் வகையில், தாம் உடனடியாக ஆஸ்திரேலியா வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு, இந்த மாணவரின் குடும்பத்தினர் இந்திய அரசைக் கேட்டுள்ளனர்.
இக்குடும்பத்திற்கு உதவுவதற்கான முயற்சிகளை இந்தியப் பின்னணிகொண்ட ஆஸ்திரேலிய மருத்துவர் Yadu Singh-உம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை கத்திக்குத்துடன் தொடர்புடைய 27 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக்குத்துக்கு உள்ளானவரும், கத்திக்குத்தை மேற்கொண்டவரும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே பரிச்சயமானவர்கள் அல்லவென பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்நபருக்கு பிணை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 14ம் திகதி நடைபெறும்வரை இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
