SKIP TO MAIN CONTENT

வெள்ளத்தில் மூழ்கி மரணமடைந்த வெளிநாட்டு மாணவனுக்கு சிட்னியில் உருக்கமான பிரியாவிடை

Ayaz Younus என்ற மென்பொருள் பொறியியலாளர் கடந்த மார்ச் மாதம் 24-ம் திகதி NSW வெள்ளத்தில் அகப்பட்டு மரணமடைந்தார்.

A supplied image of Ayaz Younus, who died when his car sank in floodwaters in Sydney's west on March 24.
A supplied image of Ayaz Younus, who died when his car sank in floodwaters in Sydney's west on March 24. Source: Supplied/Ahmadiyya Muslim Community

2 min read

Published

By Renuka


Skip to article content

Highlights

  • Ayaz Younus என்ற மென்பொருள் பொறியியலாளர் கடந்த மார்ச் மாதம் 24-ம் திகதி வெள்ளத்தில் அகப்பட்டு மரணமடைந்தார்.
  • இறுதிநிகழ்வில் கலந்துகொள்வதற்கென அவரது பெற்றோர் பாகிஸ்தானிலிருந்து வருவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
  • கோவிட் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பெற்றோர் காரில் இருந்தபடியே மகனின் இறுதிநிகழ்வைப் பார்வையிட்டனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியான வெளிநாட்டு மாணவனின் இறுதிநிகழ்வு நேற்றுமுன்தினம் சிட்னியில் நடைபெற்றது.

பாகிஸ்தானைச் சேர்ந்த Ayaz Younus என்ற மென்பொருள் பொறியியலாளர் கடந்த மார்ச் மாதம் 24-ம் திகதி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அகப்பட்டு மரணமடைந்தார்.

25 வயதான Ayaz Younus, சிட்னி வடமேற்கில் கிடைத்த ஒப்பந்த வேலையொன்றில் இணைவதற்காக சென்றுகொண்டிருந்தபோது Cattai Ridge Road, Glenorie பகுதியில் வைத்து அவரது கார் வெள்ளத்தில் மூழ்கியதில் மரணம் சம்பவித்திருந்தது.

Flood in NSW
A car is seen submerged in the Macleay River in Kempsey on the Mid North Coast of NSWImage/Jason OBrien) Source: AAP/Jason O’Brien

வெள்ளத்தில் அகப்பட்ட Ayaz Younus உடனடியாக அவசரசேவைப்பிரிவினரைத் தொடர்புகொண்டு தன்னை மீட்குமாறு கோரிக்கைவிடுத்திருந்த போதிலும் உரிய நேரத்தில் உதவி கிடைக்காததையடுத்து காரினுள்ளேயே அவர் மரணமடைந்தார்.

இந்தப்பின்னணியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சிட்னியில் நடைபெற்ற Ayaz Younus-இன் இறுதிநிகழ்வில் கலந்துகொள்வதற்கென அவரது பெற்றோர் பாகிஸ்தானிலிருந்து வருவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானிலிருந்து சிட்னியை வந்தடைந்த பெற்றோர் இருவரும் கோவிட் கட்டுப்பாடுகளின்படி கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் Ayaz Younus-இன் இறுதிநிகழ்வு நடைபெற்றபோது அதில் கலந்துகொள்வதற்காக இரு மணிநேரங்கள் அவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

The parents of Ayaz Younus watch from a car as he is buried at the Riverstone Cemetery at Marsden Park, NSW, Wednesday, May 5, 2021. Pakistani national Ayaz Younus,  died in floodwaters in Glenorie NSW in March. (AAP Image/Steven Saphore) NO ARCHIVING
The parents of Ayaz Younus watch from a car as he is buried on Wednesday. Source: AAP

இருந்தபோதிலும் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இவர்கள் இருவரும் காரில் இருந்தபடியே தமது மகனின் இறுதிநிகழ்வைப் பார்வையிட்ட அதேநேரம் தந்தையார் மாத்திரம் Ayaz Younus புதைகுழி மீது மண் தூவுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

சிட்னியில் தாம் வந்திறங்கியபோது தம்மை அழைத்துச்செல்ல Ayaz Younus வந்திருக்கிறாரா எனத் தம் கண்கள் தேடியதாகவும் ஒரேயொரு தடவை மகனைக் கட்டியணைத்து முத்தமிடத் தாம் ஏங்கியதாகவும் தந்தையார் தெரிவித்துள்ளார்.

Ahmadiyya Muslim Association Australia அமைப்பு Ayaz Younus-இன் பெற்றோருக்கான விசா ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

Ayaz Younus- இன் பெற்றோருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்ட அதேநேரம் அவரது சகோதரர்களுக்கு விசா மறுக்கப்பட்டதையடுத்து அவர்கள் இணையவழி தமது சகோதரனின் இறுதிநிகழ்வைப் பார்வையிட்டனர்.

Ayaz Younus மிகவும் இரக்க சுபாவம் உள்ளவர் எனவும், பல கனவுகளைச் சுமந்த இவர் எதுவுமே நிறைவேறாமல் மரணமடைந்துவிட்டார் எனவும்  இவரது இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Readers seeking support can contact Lifeline on 13 11 14

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now