SKIP TO MAIN CONTENT

பல்வலி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கெல்லாம் அம்புலன்ஸை அழைக்கும் ஆஸ்திரேலியர்கள்!

முக்கியமல்லாத சிறு விடயங்களுக்கும் 000-ஐ அழைப்பதன் மூலம் அதிக தேவையிலுள்ளவர்களுக்கு தமது சேவையை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

A file image of ambulances outside St Vincent's Hospital
A file image of ambulances outside St Vincent's Hospital Source: AAP

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • 000-ஐ அழைக்கவேண்டிய சூழ்நிலைகள் குறித்த விழிப்புணர்வினை அவசர சேவைப்பிரிவினர் மக்கள் மத்தியில் வேண்டி நிற்கின்றனர்.
  • மாநிலத்தில் பலர் மலச்சிக்கல், பல்வலி, காதுவலி என்பனவற்றுக்கெல்லாம் அம்புலன்ஸை அழைத்திருக்கிறார்கள்.
  • முக்கியமல்லாத சிறு விடயங்களுக்கும் 000-ஐ அழைப்பதன் மூலம் அதிக தேவையிலுள்ளவர்களுக்கு தமது சேவையை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த மார்ச் வரையான 12 மாதகாலப்பகுதியில் மாத்திரம் 1036 பேர் தங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை என்று அவசர ஊர்தி-அம்புலன்ஸ் சேவையை அழைத்துள்ளார்கள்.

அதேபோன்று 662 அழைப்புக்கள் பல் வலி என்றும் 215 அழைப்புக்கள் காதுவலி என்றும் 157 அழைப்புக்கள் தூக்கம் வரவில்லை என்றும், 167 அழைப்புக்கள் boil-கட்டு ஏற்பட்டிருக்கிறது என்றும் 16 அழைப்புக்கள் விக்கல் என்றும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கூறப்பட்ட பல தரவுகளை முன்வைத்து, அவசர சேவை இலக்கமான 000-விற்கு அழைக்கவேண்டிய சூழ்நிலைகள் குறித்த விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் வேண்டி நிற்கும் நியூ சவுத் வேல்ஸ் பொலீஸாரும் அம்புலன்ஸ் சேவையினரும், அவசர தேவைகளுக்கு மாத்திரம் அம்புலன்ஸை அல்லது அவசர சேவைப் பிரிவினரை அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த மார்ச் வரையான 12 மாதகாலப்பகுதியில் 000-விற்கு  மேற்கொள்ளப்பட்ட சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புக்கள் அவசரமற்றவை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவசர சேவையின் தேவை என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அம்புலன்ஸிற்கு அழைப்பு எடுக்காமலேயே தீர்வு கண்டுகொள்ளக்கூடிய பிரச்சினைகளுக்கு அம்புலன்ஸை அழைக்கத்தேவையில்லை என்றும் மக்கள் இது விடயத்தில் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் அம்புலன்ஸ் சேவைகள் துணை ஆணையர் Steven Norris வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தியாவசியமற்ற அல்லது முக்கியமல்லாத சிறு விடயங்களுக்கும் 000-ஐ அழைப்பதன் மூலம் அதிக தேவையிலுள்ளவர்களுக்கு தமது சேவையை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படும் என்பதையும் Steven Norris சுட்டிக்காட்டியுள்ளார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now