Highlights
- குயின்ஸ்லாந்தில் பிரதமர் ஸ்கொட் மொறிசனின் காலில் விழுந்து பெண் ஒருவர் கதறியழுதுள்ளார்.
- கமரூனிலுள்ள தனது குடும்பத்தைக் காப்பாற்றுமாறு அந்தப் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
- மனிதாபிமான அடிப்படையில் அகதிகளாக உள்வாங்கப்படுவதற்கு தகுதியானவர்களுக்கு தமது அரசு உதவும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
குயின்ஸ்லாந்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை முடித்துக்கொண்டு புறப்பட்ட பிரதமர் ஸ்கொட் மொறிசனின் காலில் விழுந்து கதறிய பெண் ஒருவர் தனது குடும்பத்தினருக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Rockhampton-இல் பலர் முன்னிலையில் பிரதமர் ஸ்கொட் மொறிசனின் உதவிக்காகக் கெஞ்சிய பெண் ஆபிரிக்க நாடான கமரூனைச் சேர்ந்தவர் ஆவார்.
கமரூனில் கொடிய யுத்தம் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில் தன்னால் அங்கு போகமுடியாதுள்ளதாகவும் அங்குள்ள தனது குடும்பத்தைக் காப்பாற்றுமாறும் அந்தப் பெண் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் எனக்கு எந்த குடும்பமும் இல்லை. எனக்கு உதவுங்கள்….ஒவ்வொரு நாளும் எனது மக்கள் கொல்லப்படுகிறார்கள். தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என்று கதறியழுதுள்ளார்.
குறித்த பெண் காலில் விழுவதைத் தடுக்க முயன்ற பிரதமர் அப்பெண்ணின் தோளைத்தொட்டு ஆறுதல்படுத்தினார்.
இச்சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த Nationals MP Michelle Landry-உம் அப்பெண்ணை ஆறுதல்படுத்தியதுடன் அவரது கோரிக்கை தொடர்பில் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதாக வாக்குறுதியளித்தார்.
மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா உள்வாங்கும் அகதிகளில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்ற பின்னணியில், இவ்வாறு அகதிகளாக உள்வாங்கப்படுவதற்கு தகுதியானவர்களுக்கு தமது அரசு நிச்சயம் உதவும் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share



