ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் (AFP) South Guilford புறநகர் பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆடவரைக் கைது செய்து, அவர் 2020 ஜூலையில் இரண்டாவது பெண்ணை மணந்தபோது முதல் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார் என்றும் ஆனால் விவாகரத்து செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் அந்த நபர் தனது இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவரது முந்தைய திருமணத்தைப் பற்றி அவரிடம் சொல்லவில்லை என்றும், அதற்குப் பதிலாக திருமண விண்ணப்பப் படிவத்தில் அவர் இதற்கு முன் செல்லத்தக்க விதத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது திருமணம் மற்றும் 2022 இன் பிற்பகுதியில் அவர் செய்துக்கொண்ட மூன்றாவது திருமணத்திற்கான சட்ட ஆவணங்களில் தவறான தகவல்களை பதிவு செய்ததற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்றாவது திருமணம் தொடர்பாக இருதார மணம் பற்றிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை, ஏனெனில் அந்த நபர் மூன்றாவது திருமணம் செய்யும்போது தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தார், மேலும் அவரின் இரண்டாவது திருமணம் செல்லாது என்று போலீசார் கூறுகின்றனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
