39 சதவீத ஆஸ்திரேலியர்களிடம் மொத்தம் 1.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பயன்படுத்தப்படாத பரிசு அட்டைகள் இருப்பதாக Finder நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் பரிசு அட்டைகள் ஒரு பிரபலமான தேர்வாக இருந்தாலும், பல வீணாகின்றன - அதாவது பயன்படுத்தப்படாத நிதி நேரடியாக பரிசு அட்டை வழங்கிய சில்லறை விற்பனையாளரிடம் மீள செலுத்தப்படும் என Finder நிறுவனத்தின் நுகர்வோர் ஆராய்ச்சியின் தலைவர் கிரஹாம் குக் கூறுகிறார்.
நீங்கள் பரிசு வழங்க விரும்புவர்கள் எதை விரும்புவார்கள் அல்லது எதைப் பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், பரிசு அட்டைகள்(Gift cards) ஒரு நடைமுறைப் பரிசாகும்Graham Cooke
ஆனால் அவ்வாறு வழங்கப்படும் பரிசு அட்டைகளை பயன்படுத்தாதன் மூலம், நீங்கள் சில்லறை விற்பனையாளருக்கு அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுக்கிறீர்கள் மற்றும் ஒரு பெரிய சேமிப்பை இழக்கிறீர்கள் என்றும் Graham Cook எச்சரிக்கறார்.
சமீப காலம் வரை, சில்லறை விற்பனையாளர்கள் ஆறு மாதங்களுக்கும் குறைவான காலாவதி தேதியுடன் பரிசு அட்டைகளை வழங்க முடியும். அதிர்ஷ்டவசமாக, அவர்கள் இப்போது குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் காலாவதி தேதியுடன் மட்டுமே பரிசு அட்டைகளை வழங்க வேண்டும்.
ஆகவே நீங்கள் பயன்படுத்தாத பரிசு அட்டைகளின் காலாவதி தேதிகளை பரிசோதித்து அதனை உடனே பயன்படுத்திம்படி அறிவுறுத்துகிறார் Graham Cook.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
