Highlights
- மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan-ஐ கொலை செய்யப்போவதாக மிரட்டியவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
- கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படும்போது Premier-இன் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
- Premier Mark McGowan இவ்வாறான அச்சுறுத்தலுக்குள்ளாவது இது முதற்தடவையல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan-ஐ கொலை செய்யப்போவதாக அவரது வீட்டுக்கு முன்பாக நின்று கூச்சலிட்டுவிட்டு ஓடியவர் கைதுசெய்யப்பட்டிருந்நிலையில் அவர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி முன்னிரவு 8.30 மணியளவில் மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan வீட்டுக்கு முன்பாக வந்து நின்ற 33 வயது நபர் கொலை அச்சுறுத்தல் விடுக்கும்போது, Mark McGowan-இன் மனைவி வீட்டின் பல்கனியில் நின்றிருக்கிறார். ஏனையோர் வீட்டினுள் இருந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, தனது மூன்று குழந்தைகளையும் அறையொன்றினில் விட்டு பாதுகாப்பாக பூட்டிவிட்டு Premier Mark McGowan பொலீஸாரை அழைத்துள்ளார்.
கொலை அச்சுறுத்தல் விடுத்த நபரை உடனடியாக கைது செய்த பொலீஸார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திவிட்டு பின்னர் தடுப்புக்காவலில் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்றையதினம் இரண்டாவது தடவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் நடைபெற்ற அன்று உடனடியாக செயற்பட்டு சம்பந்தப்பட்ட நபரைக் கைதுசெய்த பொலிஸாருக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் Premier Mark McGowan தெரிவித்துள்ளார்.
Premier Mark McGowan இவ்வாறான அச்சுறுத்தலுக்குள்ளாவது இது முதற்தடவையல்ல எனவும், கடந்த மாதம், இவரது அலுவலகத்தின் மீது மர்மமான பவுடர் அடங்கிய பொதி ஒன்று வீசப்பட்டதையடுத்து, அலுவலகத்துக்குரிய பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பவுடர் பொதி ஆபத்தானது இல்லை என்று பின்னர் பொலீஸாரினால் தெரிவிக்கப்பட்டது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share



