சென்னை, கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளராகக் கடமையாற்றும் ராஜேஸ்வரி அவர்கள் பெண்கள், மன நலம் பாதிக்கப்பட்டோர், ஊனமுற்றோர் மட்டுமல்ல பொது மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
அவரது செயற்பாட்டை மெச்சி, அவள் விகடன் பத்திரிகை அண்மையில் ‘செயல் புயல்’என்ற விருது வழங்கி மரியாதை செலுத்தியுள்ளது.
காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களின் பின்னணி குறித்தும், அவரது செயற்பாடுகள் குறித்தும் அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




