SKIP TO MAIN CONTENT

உரிமைகோரப்படாத நிலையில் பல மில்லியன் டொலர்கள்! உங்களுடையதாகவும் இருக்கலாம்!!

சுமார் 111 மில்லியன் டொலர்கள் உரிமைகோரப்படாதநிலையில் தம்வசம் இருக்கிறதென விக்டோரியா மாநில அரசு தெரிவித்துள்ளது.

Australian Dollars.
Fair work commission announces rise in the minimum wages. Source: RBA

2 min read

Published

Updated


Skip to article content

பங்குகளின் விற்பனை, அதிஷ்டலாபச்சீட்டு, வாடகை முன்பணம், மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் கட்டணங்கள், சம்பள மீதி, வட்டி உள்ளிட்ட பல வழிகளின் ஊடாகப் பெறப்பட்ட 111 மில்லியன் டொலர்கள், சம்பந்தப்பட்டவர்களால் இன்னமும் உரிமை கோரப்படாத நிலையில் State Revenue Office-இல் காத்திருப்பதாக விக்டோரிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மெல்பன் நகர கவுன்சிலில் 15.2  மில்லியன் டொலர்களும், Monash கவுன்சிலில் 7 மில்லியன் டொலர்களும், Boroondara கவுன்சிலில் 6.7 மில்லியன் டொலர்களும், Whitehorse கவுன்சிலில் 4.8 மில்லியன் டொலர்களும் இதுவரை உரிமைகோரப்படவில்லை.

தமக்கான பணத்தை உரிமைகோராதவர்களில் Box Hill பகுதியைச் சேர்ந்த ஒருவர்($882,697)  Nunawading பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ($677,002) South Yarra ஐச் சேர்ந்த ஒருவர்($153,165) என பலரும் அடங்குகின்றனர்.

மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் கட்டணங்கள், உள்ளூர் கவுன்சில்கள், real estate முகவர்கள்,  பங்குகளின் விற்பனை, வாடகை முன்பணம், சம்பள மீதி, காப்பீட்டு நிறுவனங்கள், அதிஷ்டலாபச்சீட்டு  மற்றும் வட்டி  உள்ளிட்ட ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் பணத்திற்குரியவர், அதனை 12 மாதங்களுக்குப் பிறகும் உரிமை கோரவில்லை என்றால், அப்பணம் State Revenue Office-வின் பதிவில் வைக்கப்படும். 

மேற்குறிப்பிட்ட ஆதாரங்களில் இருந்து கிடைத்த 20 மில்லியன் டொலர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமார் 60,000 பேரால் வெற்றிகரமாக உரிமை கோரப்பட்டுள்ளன.

இந்தப்பின்னணியில் உரிமைகோரப்படாத 111 மில்லியன் டொலர்களில் உங்களது பணமும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள sro.vic.gov.au/unclaimed-money என்ற இணையத்தளத்திற்குச் சென்று  பாருங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now