தடுப்புமருந்துகள் பொதுவாக ஊசிமூலமாகவே ஏற்றப்படுகின்றன. 1953 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த போலியோவுக்கான தடுப்புமருந்து முதலில் ஊசி மூலமாகவே ஏற்றப்பட்டது. இது ஊசிமருந்து என்ற வகையில் எல்லாக்குழந்தைகளுக்கும் பரவலாக விநியோகிக்க முடியாத நிலையில் சுமார் 9 ஆண்டுகளின் பின்பு வாய்வழியாகக்கொடுக்கக் கூடிய சொட்டு மருந்தாக அறிமுகமானது.
இந்தச் சொட்டுமருந்து விநியோகிப்பது, பத்திரப்படுத்துவது, குழந்தைகளுக்கு கொடுப்பது என்பது மிக எளிதாக இருந்தகாரணத்தால் எல்லோருக்கும் பரவலாகக்கொடுக்கப்பட்டு, இன்றைய நிலையில் போலியோநோய் பூமியில் அறவே இல்லை என்று சொல்லக்கூடிய நிலை இப்போது உருவாகியிருக்கிறது.
ஆகவே வசதி குறைந்த, பின்தங்கிய, சாலைகளற்ற தூர இடங்களில் இருப்பவர்களுக்கு ஊசிமருந்தை கொண்டு சேர்ப்பதில் உள்ள நடைமுறை சாத்தியங்கள் காரணமாகவும் சமூகத்தில் பலரிடையே ஊசி ஏற்றிக்கொள்வது தொடர்பாக உள்ள அச்சங்கள் காரணமாகவும் COVID-19 இற்கு எதிரான ஊசியில்லாத தடுப்பு மருந்துகள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றே வருகின்றன.
Simpler and faster - சிக்கலில்லாமல் எளிமையாக, விரைவாக எல்லோருக்கும் தடுப்பு மருந்தை வழங்கும் நோக்கத்துடன் நடைபெறும் இந்த ஆராய்ச்சிகளின் பயனாக ஊசியில்லாத பல்வேறு வகையிலான தடுப்புமருந்துகள் பரிசோதனை கட்டத்திலும் phase 1 clinical trials என்ற கட்டத்திலும் இப்போது இருக்கின்றன. எப்படி இருந்தபோதும் இந்த மாற்று தடுப்புமருந்துகள் ஊசிமருந்து போன்ற செயல்திறன் உள்ளவை என்பதை உறுதிசெய்வதே பெரிய சவாலாகும்.

A Somali baby receives a polio vaccine at the Medina Maternal Child Health center in Mogadishu, Somalia in 2013. Source: AAP
ஊசியில்லாத தடுப்புமருந்துகள் என்ன delivery system - எந்த வகையில் உடலுக்குள் ஏற்றப்படப்போகின்றன?
பிரதானமாக நமக்குப் பரிச்சயமான மாத்திரை வடிவில் அவை வரவிருக்கின்றன. அதேபோல nasal spray என்ற வடிவில், மூக்கினுள் spray செய்யக் கூடியவிதத்தில் வரவிருக்கின்றன. இதைத்தவிர patch என்ற வடிவில் நமது தோலின் மேற்பகுதியில் ஒட்டக்கூடிய plaster patch கள் வடிவில் வரவிருக்கின்றன.
இதைத்தவிர தோலில் உள்ள சிறு துவாரங்கள் வழியாக உடலுக்குள் செலுத்தக் கூடிய pressure gun வடிவில் வர இருக்கின்றன. இவை ஊசி மருந்துகள் ஏற்படுத்தும் side effects - பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இவை எப்படி செயல்படுகின்றன?
Nasal Spray என்ற மூக்குவழியாக spray செய்யக்கூடிய தடுப்பு மருந்து தொடர்பாக 13 நிறுவனங்கள் ஆராய்சிகளை நடத்திவருகின்றன. இவற்றுள் Altimmune உட்பட 5 நிறுவனங்கள் இது தொடர்பான phase 1 clinical trials களை ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றன. இதற்கான அனுமதியை அமெரிக்காவில் FDA என்ற Foods and Drugs Administration என்ற அமைப்பு வழங்கியிருக்கிறது.
வைரஸ்கள் உடம்பில் நுழையக்கூடிய பிரதான உறுப்பாகிய மூக்கின் உட்புறமான nasal cavity என்ற பகுதியில் mucosal immunity என்ற நோயெதிர்ப்புத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தடுப்புமருந்துகள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன. Adcovid என்ற பெயர்கொண்ட இந்த spray, உடலில் antibody என்ற நோயெதிர்ப்புச்சக்தியையும் T மற்றும் B cell response என்ற T மற்றும் B lymphocytes என்ற வெண் அணுக்களை நோயெதிர்ப்புக்கு ஆயத்தம் செய்யும் உந்துதலையும் கொடுப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த மாதிரியான ஆராய்ச்சிகளில், US, UK, China, India போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

close up of sick woman using nasal spray Source: Getty Image
5 நிறுவனங்கள் tablets என்ற மாத்திரைகள் வடிவிலமைந்த தடுப்புமருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்திவருகின்றன. இவற்றுள் Immunity Bio என்ற நிறுவனம் உட்பட இரண்டு நிறுவனங்கள் ஆரம்பகட்ட clinical trials களை ஆரம்பித்திருக்கின்றன. இந்த Immunity Bio நிறுவனத்தின் மாத்திரைகளும் வைரஸ்களின் உருமாற்றத்தை துரிதப்படுத்தும் outer spike protein என்ற வைரஸ்களின் மேற்பகுதியில் முட்கள் போன்ற புரதப்பகுதியைக் குறிவைத்தும் அதேநேரம் T மற்றும் B வெண்அணுக்களை நோயெதிர்ப்புக்கு ஆயத்தம் செய்வதை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும் செய்யப்படுகின்றன.
Immunity Bio நிறுவனம் தவிர, Vaxart, Oravax, Merck, Pfizer, போன்ற பல நிறுவனங்கள் மாத்திரை வடிவிலான COVID-19 தடுப்பு மருந்துகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை நடத்திவருகின்றன.

Dr. Jesse Erasmus checks a serum sample he diluted under a microscope Source: Getty Images North America
இவற்றைத்தவிர, ஆஸ்திரேலியாவிலுள்ள இரண்டு பல்கலைக்கழகங்கள் முற்றிலும் வித்தியாசமான தடுப்பு மருந்து வழங்கல் முறைகள் பற்றி ஆராய்ந்துவருவதாக சொல்லப்படுகிறதே? இது தொடர்பான விபரங்கள் என்ன?
உலகிலேயே முதல்தடவையாக மிக வித்தியாசமான முறையில் தடுப்புமருந்தைச் செலுத்தும் முறையொன்று பற்றி Queensland பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். இங்கு, நம்நாட்டில் தடுப்புமருந்து செலுத்துவதில் பாரிய முன்னேற்றங்கள ஏற்படாத நிலையில், தாங்கள் ஆராய்ச்சிசெய்துவரும் patch என்ற தோலின்மீது ஒட்டிக்கொள்ளும் patch மூலமான தடுப்புமருந்து ஊசிபோட்டுக்கொள்ள விரும்பாத பலருக்கும் பயன்தரும் என்று கூறுகிறார்கள்.
Patch வடிவிலான தோலின்மீது ஒட்டப்படும் இந்த தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையில், ஊசிமருந்தைவிட அதிகமான செயல்திறன் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் David Muller கூறியிருக்கிறார். தற்போதைய நிலையில் எலிகள் மீது செய்யப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்திருப்பதாகவும் மனிதர்மீதான சோதனைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் டாக்டர் Muller கூறியிருக்கிறார்.
இதை மனிதருக்கு உடலில் ஒட்டுவதற்கு 10 நொடிகள் மட்டுமே எடுக்கும் என்றும் ஒருமுறை ஒட்டப்பட்ட patch 25 நாட்கள் வரை உடலில் ஒட்டியிருக்குமென்றும் அதன்பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டாவது patch ஒட்டப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதைத்தவிர Sydney பல்கலைக்கழகம் pressure என்ற அழுத்தத்தைப்பயன்படுத்தி தோலின்மீதுள்ள சிறு துளைகளின் வழியாக தடுப்புமருந்தை உடலுக்குள் செலுத்தும் ஒரு முறை பற்றி அறிவித்திருக்கிறது. இதற்கான clinical trials நடவடிக்கைகளுக்கு Sydney, Adelaide , Perth போன்ற இடங்களில் 150 பேர் இப்போது திரட்டப்பட்டுவருகிறார்கள்.
ஊசியில்லாத கருவி ஒன்றின் மூலமாக DNA மரபணு சுவடுகளை உடலில் உள்ள கலங்களில் பதிப்பதே இதன் நோக்கமாகும் என்று சிட்னி பல கலைக்கழக Associate professor Nick Wood தெரிவித்திருக்கிறார்.

COVID-19 clinical trial participants undertake Phase 1 dosing with Nucleus Network Source: Nucleus Network/ABC
இந்த அடிப்படையில் அமெரிக்காவில் ஏற்கனவே flu jab என்ற சளிச்சுரத்திற்கான தடுப்பு மருந்து வழங்கப்பட்டுவருவதாகவும் ஆஸ்திரேலியாவி்ல் ஆராய்ச்சிகளுக்கு இந்த முறையைப்பயன்படுத்த அனுமதி உள்ளதாகவும் பேராசிரியர் Wood தெரிவித்தார்.
Covigen என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்புமருந்து உடலில் immune system என்ற நோயெதிர்புச்சக்தியை அதிகரித்து COVID- 19 இற்கு எதிரான பாதுகாப்பு அரணாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிகளுக்காக Medical Research Future Fund என்ற நிதியிலிருந்து 30 லட்சம் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஊசிமருந்தைத் தவிர பல்வேறுவழிகளில் தடுப்புமருந்தைச் செலுத்த அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் பெரும்பான்மை மக்களுக்கு தடுப்புமருந்தை கொண்டு போய்ச்சேர்க்கமுடியும்- அப்படித்தானே?

DNA. Digital healthcare and network connection on hologram modern virtual screen interface, medical technology and network concept. Source: Getty Images
குடிமக்களுள் பெரும்பான்மையினர் தடுப்புமருந்தைப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் herd immunity என்ற திரள் நோய்க்காப்புத்தன்மை உருவாகும்; நாளாவட்டத்தில் COVID-19 ஐ முற்றாக ஒழித்துவிடமுடியும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்போது mix and match என்ற வகையில் இரண்டு வேறுபட்ட தடுப்பு மருந்துகளை ஒருவருக்கு கொடுக்கமுடியாது என்றபோதும் எதிர்காலத்தில் இது சாத்தியமாகக்கூடும் என்றும் இதனால் நோயெதிர்ப்புச்சக்தி பலமடங்கு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் பேராசிரியர் Wood தெரிவித்திருக்கிறார்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


