மெல்பனில் மேலும் ஒருவருக்கு கோவிட் தொற்று! இன்றுமுதல் புதிய கட்டுப்பாடுகள்!!

People line up to get tested for Covid-19 outside the Royal Melbourne Hospital in Melbourne, Tuesday, May 25, 2021. (AAP Image/Luis Ascui) NO ARCHIVING

People line up to get tested for COVID-19 in Melbourne. Source: AAP

Highlights
  • மெல்பனில் சமூகப் பரவல் ஊடாக மேலும் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • நேற்றையதினம் நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
  • இன்று மாலை 6மணி முதல் மெல்பன் பெருநகரப்பகுதியில் கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவருகின்றன.
மெல்பனில் சமூகப் பரவல் ஊடாக மேலும் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து இன்று பிற்பகல் 6 மணிமுதல் கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவருகின்றன.

நேற்றையதினம் மெல்பன் வடக்கிலுள்ள Whittlesea பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மேலும் மூவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இன்றையதினம் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த நபரிடமிருந்தே நேற்று முதலாவதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபருக்கு நோய் பரவியிருக்கக்கூடும் எனவும்  குறிப்பிடப்படுகிறது.
இந்த கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது கோவிட் தொற்றுக்குள்ளானநிலையில் மெல்பனின் Wollert பகுதிக்கு திரும்பிய நபர் ஊடாகவே இப்பரவல் ஏற்பட்டிருப்பதாகவும் ஆனால் இதுவரை தொற்றுக் கண்டவர்களுக்கும் Wollert நபர் சென்றுவந்த இடங்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை எனவும் மற்றுமொரு நபர் ஊடாகவே இத்தொற்று கடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மெல்பனின் வடக்கில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவலையடுத்து இன்று 25ம் திகதி மாலை 6 மணிமுதல் மெல்பன் பெருநகரப்பகுதிகள் முழுவதிலும் பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

  • வீடுகளுக்கு 5 விருந்தினர்களுக்கு மேல் வருகைதர முடியாது.
  • வெளிப்புற ஒன்றுகூடல்களில் அதிகபட்சம் 30 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.
  • உள்ளரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
இக்கட்டுப்பாடுகள் ஆகக்குறைந்தது எதிர்வரும் ஜுன் 4 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சென்றுவந்த விவரங்களை வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Tier 1 COVID exposure sites

  • Jump Swim School in Bundoora between 8:55am and 10:15am on May 21
  • Highpoint Shopping Centre, in Melbourne's west, between 5:00pm and 8:00pm on May 20
  • Nando's at Dalton Road in Epping between 8:30pm and 9:20pm on May 19
  • Woolworths Epping North between 4:45pm and 5:45pm on May 22

Tier 2 COVID exposure sites

  • Futsal Brunswick at 409 Victoria Street in Brunswick between 9:00am and 10:00am on May 23
  • Epping North Shopping Centre on Lyndarum Drive in Epping between 4:45pm and 5:50pm on May 22
  • House and Party Store on Lyndarum Drive in Epping between 5:15pm and 5:50pm on May 22
  • Urban Diner Food Court, Pacific Epping Shopping Centre, at 571-583 High Street in Epping between 1:15pm and 2:30pm on May 23
  • Shell Coles Express Reservoir at 192-202 Broadway and Whitelaw Streets in Reservoir between 3:15pm and 4:15pm on May 18
  • BT Connor Reserve at 200 Broadhurst Avenue in Reservoir between 8:00pm and 11:30pm on May 21
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand