SKIP TO MAIN CONTENT

NSW மாநிலத்தில் புதிதாக 44 பேருக்கு தொற்று! இறுக்கமடையும் கட்டுப்பாடுகள்!!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

NSW Premier Gladys Berejiklian speaks to the media during a COVID-19 press conference in Sydney, Thursday, July 8, 2021. NSW has recorded 38 new locally acquired COVID-19 cases overnight. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING
NSW Premier Gladys Berejiklian Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

Highlights

  • நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong, Shellharbour பகுதிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.
  • மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவிவருகின்றது.

கடந்த ஜுன் மாதம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் பரவல் ஆரம்பித்தததையடுத்து அங்கு ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 29 பேர் நோய்த்தொற்றுடன் குறிப்பிட்ட சில நாட்களோ அல்லது முழுமையாகவோ சமூகத்தில் நடமாடியுள்ளதாக Premier Gladys Berejiklian தெரிவித்தார்.

இதன்காரணமாக அடுத்துவரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.

இந்நிலையில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்படுவதாக Premier Gladys Berejiklian அறிவித்தார்.

இதன்கீழ் குறித்த பகுதிகளில் வாழ்பவர்கள் தமது வீடுகளிலிருந்து 10 கிலோமீட்டர்களுக்கு உட்பட்ட இடங்களுக்கே உடற்பயிற்சிக்காக வெளியே செல்ல முடியும். அத்துடன் இருவருக்குமேல் உடற்பயிற்சிக்காக வெளியேசெல்லமுடியாது(ஒரே குடும்பத்தவர்களுக்கு விதிவிலக்கு உண்டு)

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைமுதல் இறுதிநிகழ்வுகளில் அதிகபட்சம் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம்.

Carpooling-க்கு தடைவிதிக்கப்படுகிறது.

சமூகப்பரவல் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள்வந்த பின்னர் மாத்திரமே கோவிட் கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்தமுடியும் எனவும் அதுவரை இயல்புவாழ்க்கைக்கு திரும்பமுடியாது எனவும் Premier Gladys Berejiklian  எச்சரித்தார்.

Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை, கல்வி(வீட்டிலிருந்து வேலைசெய்ய அல்லது கல்விகற்க முடியாதபட்சத்தில் மாத்திரம்) பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.

சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவரிடமிருந்தே இப்பரவல் ஆரம்பித்திருந்தது.

இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now