Greek Mythology என்ற கிரேக்க புராணக்கதைகளுள் Pandora Box என்ற ஒரு பெட்டியை அடிப்படையாக வைத்து ஒருகதை உண்டு. இந்தக் கதையில் Zeus, மனிதர்களைத் தண்டிப்பதற்காக, Pandora என்ற அழகும், அறிவும், கருணையும் , தாராள சிந்தையும் உடல் நலமும் உள்ள ஒரு பெண்ணை உருவாக்கியதாகவும் அந்தப் பெண்ணுக்கு திருமணப் பரிசாக இந்த pandora box ஐக் கொடுத்து, ‘எந்தச்சந்தர்ப்பத்திலும் இதைத்திறக்கக் கூடாது’ என்ற எச்சரிக்கையையும் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் ‘curious’ என்ற ஆவல் கொண்டவளாகப் படைக்கப்பட்ட Pandora, ஆவல் பொறுக்க மாட்டாதவளாக, இந்தப் பெட்டியைத்திறந்ததாகவும் அந்தப்பெட்டியிலிருந்துதான் பேராசை, பொறாமை, வேதனை, வெறுப்பு, நோய், பசி, ஏழ்மை, யுத்தம், மரணம் போன்ற எல்லாத்துன்பங்களும் பூமிக்கு வந்ததாகவும் இந்தக் கதை சொல்கிறது. இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, ‘சில ரகசியங்களை ஆராய்ந்து பார்க்க க்கூடாது’ என்பதைக் குறிப்பிடவோ அல்லது ஒரு விஷயத்தை ஆராயப்போய் எதிர்பாராமல் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவருவதைக் குறிப்பிடுவதற்காகவோ Pandora box என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.

Teenage girl (14-15) looking into box Source: Stone RF
Pandora box ஐத்திறந்தது போன்றதொரு சம்பவம் அண்மையில் நடைபெற்றிருக்கிறது.
இதுவரை வெளிவராமல் மறைத்துவைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஆவணங்கள் International Consortium of Investigative Journalists என்ற ஊடகவியலாளர்கள் குழுவினால் சில தினங்களுக்குமுன் வெளியிடப்பட்டபோது, உலகில் கோடீஸ்வர ர்களாலும் அதிகாரம் மிக்கவர்களாலும் அரசியல்வாதிகளாலும் தனிப்பட்டவர்களாலும் பதுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட கோடிக்கணக்கான pounds மற்றும் dollars பெறுமதியான நிதி, வரி ஏய்ப்பு, money laundering- சட்டத்திற்கு புறம்பாக நிதி சேர்த்தல் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த ஆவணங்கள் இப்போது Pandora papers என்று அழைக்கப்படுகின்றன.
Pandora boxஐத் திறந்தது போன்றதொரு சம்பவம்
இந்த ஆவணங்களை வெளியில் கொண்டுவந்த ஊடகவியலாளர்கள் குழுவில் 117 நாடுகளைச்சேர்ந்த 600 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் செயல்பட்டனர். பல மாதங்களாகளாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன் இவை முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் 65 லட்சம் ஆவணங்களும் 30 லட்சம் படங்கள், 10 லட்சம் மின்அஞ்சல்கள், மற்றும் 5 லட்சம் spreadsheets என்ற அட்டவணைகள் என்பனவும் அடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்ற கேள்வி பிறக்கிறது.
இதுவரை வந்துள்ள சில தகவல்களின் படி, பிரிட்டனில் 1500 இற்கும் மேற்பட்ட properties- ஆதனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன், சிலவேளைகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட நபர்களின் உதவியுடன் வாங்கப்பட்டிருக்கிறது என்று பின்வரும் தகவல்களை இந்த இந்த ஆவணம் கூறுகிறது:
கட்டார் நாட்டில், ஆளும் அரசகுடும்பத்தினர், லண்டன் நகரத்தில் வாங்கிய மாளிகை தொடர்பாக சுமார் 2 கோடி pounds வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள்.
ரகசியமாக நடத்திவந்த நிறுவனங்கள் மூலமாக ஜோர்தான் மன்னர் சுமார் 1 கோடி pounds பெறுமதியான சொத்துக்களை பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் வாங்கியிருக்கிறார்.
செக்காஸ்லேவிய பிரதமர் வெளிநாட்டு முதலீட்டை மறைத்து பிரான்ஸில் வில்லா ஒன்றை 1கோடி pounds இற்கு வாங்கியிருக்கிறார்.
கென்ய அதிபரின் குடும்பம் வெளியில் தெரியாத, பல வெளிநாட்டு நிறுவனங்களை நடத்திவருகிறது.
மேலும் உலகில் வேறு எங்குமே சொத்துக்கள் இல்லை என்று வாதிட்டுவந்த அனில் அம்பானிக்கு சுமார் 18 வெளிநாட்டு நிறுவனங்கள் ஜெர்ஸி, பிரிட்டிஷ் வர்ஜின் ஐலண்ட் மற்றும் ஸைப்பிரஸ் ஆகிய நாடுகளில் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Kenya's President Uhuru Kenyatta (one of 330 current & former politicians identified) speaks at the inauguration ceremony of Ethiopia's Prime Minister. Source: AP
சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுள்ள Rio Tinto, BHP Billiton மற்றும் சில ஆஸ்திரேலிய நிறுவனங்கள் குற்றப்பின்புலமுள்ள சீன கோடீஸ்வர ரான Du Shuanghua வுடன் தொடர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக இந்த இந்த ஆவணம் கூறுகிறது.
சஞ்ஜீவ் குப்தாவுக்குச்சொந்தமான ஆஸ்திரேலிய நிறுவனமான Arriums mining சம்பந்தப்பட்ட முறைகேடுகளும் நடந்திருப்பதாக இந்த இந்த ஆவணம் கூறுகிறது.
90 நாடுகளைச்சேர்ந்த அரசியல் வாதிகள் 330 பேர், offshore என்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ரகசியமாக தொடர்பு வைத்து தமது சொத்துக்களை மறைத்து வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
35 இற்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல் தலைவர்கள், 400 இற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள், 100 இற்கும் மேற்பட்ட கோடீஸ்வர்ர்கள், 300 இற்கும் மேற்பட்ட பொது ஊழியர்கள், சினிமா பிரபலங்கள், விளயாட்டுத்துறை பிரபலங்கள் ஆகியோரது பெயர்கள் இந்த Pandora papers பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
Offshore நிறுவனங்கள் எங்கே இயங்குகின்றன?
Offshore என்ற வெளிநாட்டு நிறுவனங்கள் எங்கே பெரும்பாலும் இயங்குகின்றன என்று நாம் அறிவது அவசியம்.
Offshore என்ற வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் சட்டம், நிதி முகாமைத்துவம், வரிவசூலிக்கும் திட்டவட்டமான நடைமுறை என்பன செயல்படாத தீவுகள், territories என்ற பிராந்தியங்கள் என்பவற்றில் இயங்குகின்றன. இப்படியான இடங்களில் companies என்ற நிறுவனங்களை ஸ்தாபிப்பது எளிது என்பதோடு யார் இதன் உரிமையாளர் என்பதை தெரிந்துகொள்வதும் கடினம். அங்கு வருமானவரி இல்லை என்பதும் மேலதிக சௌகர்யமாகப் பார்க்கப்படுகிறது. Cayman Islands, Virgin Islands போன்றவை இப்படியான தீவுகளாக க் குறிப்பிடப்படுகின்றன. இதைத்தவிர சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நிதியை வைப்பில் வைத்திருக்கமுடியும் . இது பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்படமாட்டாது.
வெளிநாடுகளில் பணம் வைத்திருப்பது குற்றச்செயலா?
வெளிநாடுகளில் பணத்தை வைப்பில் வைத்திருப்பது குற்றச்செயலாகுமா என்று நாம் யோசிக்கக்கூடும்.
அதற்கு சுருக்கமான பதில் இல்லை என்பதே. பாதுகாப்பு கருதி அல்லது நிலையில்லாத அரசியல் சூழ்நிலைகள் காரணமாக வெளிநாடுகளில் முதலீடு செய்வது, நிதி நிறுவனங்களில் வைப்பில் வைப்பது, நிறுவனங்களை நடத்துவது சட்டப்படி குற்றமாகாது.
ஆனால், ரகசியமான, சிக்கலான வெளிப்படையற்ற நிறுவனங்களை தனது சொத்துக்களை மறைத்து வைக்கப் பயன்படுத்துவதும், அந்த நிதியை இன்னோரன்ன ரகசிய பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்துவதும் எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதும் குற்றமாகும்.
இப்படி ரகசியமாக மறைத்துவைத்துள்ள நிதியின் அல்லது சொத்துக்களின் பெறுமதி 6 trillion டாலர்கள் தொடக்கம் 32 trillion டாலர்கள் வரை இருக்குமென்றும் இதனால் ஏய்க்கப்படும் வரி, வருடாந்தம் 600 பில்லியன் டாலர்கள் அளவில் இருக்குமென்றும் IMF- சர்வதேச நாணய நிதியம் சொல்கிறது.
இனி தற்போது வெளிவந்துள்ள Pandora Papers களின் அடிப்படையில் தொடர்புள்ள நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட நாடுகள் தனிப்பட்ட விசாரணைகளை ஆரம்பிக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.