SKIP TO MAIN CONTENT

தடுப்பூசி போட்டிருந்தால் ஒரு beer இலவசம்- பிரதமர் ஆதரவு !

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கப்படும் என்ற மெல்பன் pub ஒன்றின் அறிவிப்பிற்கு பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

The Prince Alfred Hotel began offering complimentary pints of beer to vaccinated drinkers last week before the TGA intervened.
The Prince Alfred Hotel began offering complimentary pints of beer to vaccinated drinkers last week before the TGA intervened. Source: Facebook/PrinceAlfredHotel

2 min read

Published

Updated


Skip to article content

Port Melbourne-இலுள்ள Prince Alfred ஹோட்டலுக்கு அருகில் தடுப்பூசி வழங்கும் மையம் இயங்க ஆரம்பித்ததையடுத்து, கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கும் செயன்முறையை கடந்த வாரம் குறித்த ஹோட்டல் ஆரம்பித்திருந்தது.

ஆனால் மருந்துப்பொருளுடன் தொடர்புடைய சலுகையாக மதுபானத்தை வழங்கமுடியாது என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியமான Therapeutic Goods Administration (TGA) இதற்கு தடைவிதித்தது.

TGA-இன் இத்தீர்மானம் நியாயமானது என்றாலும் தற்போதைய சூழலில் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்பதால் இவ்வாறான ஊக்குவிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை என பிரதமர் Scot Morrison தெரிவித்தார்.

குறித்த சலுகைமீது விதிக்கப்பட்ட தடை தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தடுப்பூசி திட்டத்தில் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவதற்காக Prince Alfred ஹோட்டலுக்கு தனது வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கும் சலுகைமீது விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு TGA-இடம் சுகாதார அமைச்சர் Greg Hunt கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley-யும் Prince Alfred ஹோட்டலின் இலவச beer சலுகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

எனினும் Victorian Alcohol and Drug Association தலைமை நிர்வாகி Sam Biondo, TGA-இன் தடை மீளப்பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் தனது விமர்சனத்தை பதிவுசெய்துள்ளார்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now