35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Backpacker விசாவை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்துமா?

Working holiday திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள். தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப Backpaker வீசா என்றும் அழைக்கப்படும் இந்த வீசாவிற்கான வயது வரம்பை 50 ஆக உயர்த்தும்படி அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனை ஆலோசித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

A woman smiling

Elin Holm first came to Australia as a 23-year-old and has returned a decade later. Source: Supplied / Elin Holm

Working Holiday விசாக்கள் - பெரும்பாலும் 'Backpacker விசாக்கள்' என்றும் குறிப்பிடப்படுகின்றன. தற்போது 18 முதல் 30 வயதுடைய தகுதியுள்ள நாடுகளின் குடிமக்களுக்கும், கனடா, டென்மார்க், அயர்லாந்து, இத்தாலி மற்றும் விரைவில் UK உட்பட ஒரு சில நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டும் 35 வயது வரையிலான வரம்புடன் இந்த வீசா வழங்கப்படுகிறது.

Working Holiday Maker program (WHM)1975 இல் நிறுவப்பட்டது, இது இளைஞர்களுக்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறை மற்றும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக தற்காலிக வேலைகளில் வேலை செய்ய அனுமதிக்கிறது . இத்திட்டத்தின் பங்குதாரர் நாடுகளில் ஆஸ்திரேலியர்களும் விடுமுறைக்கு சென்று வேலை செய்யும் வகையில் இந்த திட்டம் பரஸ்பர இயல்புடையது.

ஆனால் சுற்றுலா மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட துறைகள் கோவிட் பேரிடர் தாக்கத்திலிருந்து மீளப் போராடி வரும் நிலையில் தொழிலாளர் பற்றாக்குறையுடன் சிக்கித் தவிப்பதால், Tourism and Transport Forum Australia (TTFA) Working Holiday விசாக்களை விரிவுபடுத்துவதற்கான அழைப்புகளை முன்வைத்து, வயது வரம்பை உயர்த்த பரிந்துரைக்கிறது
A table showing countries and their age limits for Working Holiday visas
Source: SBS
"சுற்றுலாத் துறையில் திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் ஒரு தீர்வு, வேலை செய்யும் உரிமையுடன் விடுமுறையில் வருபவர்களின் வயது வரம்பை 50 ஆக அதிகரிப்பதாகும்" என்று TTFA-இன் நிர்வாக இயக்குனர் Margy Osmond கூறினார்.

A woman pushes a wheelbarrow on a farm in NSW.
Elin arrived in Australia on a working holiday visa in December, after applying just before she hit the age deadline. Credit: Supplied
ஆஸ்திரேலியாவின் இந்த Working Holiday வீசா திட்டத்தில் இப்போது 47 நாடுகள் பங்கேற்கின்றன, மேலும் விண்ணப்பதாரர்கள் வெறும் $510 செலவில் விண்ணப்பிக்கலாம். Working Holiday வீசா திட்டத்தில் subclass 417 மற்றும் subclass 462 ஆகியவை அடங்கும், மேலும் சில தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் இரண்டாவது மற்றும் மூன்றாம் ஆண்டுக்கும் திரும்புவதற்கான வாய்ப்புகளுடன், ஆஸ்திரேலியாவில் ஒரு வருடத்திற்கு வேலை செய்யவும் விடுமுறை செய்யவும் இத்திட்டம் அனுமதிக்கிறது.

விவசாயம் போன்ற பருவகால தொழில்களில் பணிப் புரிய இந்த Backpaker வீசா ஒரு நல்ல திட்டம் அது ஆஸ்திரேலியாவில் நன்றாக வேலை செய்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2021-22 ஆம் ஆண்டில், Working Holiday Maker திட்டத்திற்காக 95,901 விசா விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் இவர்களுக்கு நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு 16 டிசம்பர் 2022 நிலவரப்படி, கிட்டத்தட்ட 129,300 backpakers ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளனர்.


SBS தமிழ் குடியேற்றம் குறித்து ஆலோசனை வழங்காது. மேலதிக தகவல்களுக்கு immi.homeaffairs.gov.au இணையத்தளத்தை பார்வையிடவும். Working Holiday Maker திட்டத்தைப் பற்றிய தகவலையும் மேல் உள்ள இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்

————————————————————————————————————————-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

By Isabelle Lane, Selvi
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand