SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய செல்வந்தர்களின் பட்டியலில் தமிழர்!

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதி ஆய்வு ஊடகமான Financial Review பட்டியல்படுத்தியுள்ள இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார்.

Maha Sinnathamby OAM
Maha Sinnathamby OAM Source: Supplied

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • Financial Review பட்டியல்படுத்தியுள்ள இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் மகா சின்னத்தம்பி 64 ஆவது நபராக இடம்பெற்றுள்ளார்.
  • மகா சின்னத்தம்பியின் சொத்துப்பெறுமதி 1.78 பில்லியன் டொலர்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
  • இரும்பு தாது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறை பெரு முதலாளியான Gina Rinehart முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மலேசியாவிலிருந்து 1970-களில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து கட்டுமான துறையில் மிகப்பெரிய செல்வந்தராக திகழும் மகா சின்னத்தம்பி Financial Review பட்டியல்படுத்தியுள்ள ஆஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் 64 ஆவது நபராக இடம்பெற்றுள்ளார்.

1980-களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தனது பல்கலைக்கழக படிப்பை நிறைவு செய்துகொண்டு குயின்ஸ்லாந்துக்கு சென்ற மகா சின்னத்தம்பி, 2860 ஹெக்டயர் பரப்பளவுடைய மிகப்பெரிய காட்டு நிலமொன்றை இன்னொருவருடன் இணைந்து 72 லட்சம் டொலர்களுக்கு வாங்கி, அந்த நிலத்தை மக்கள் குடியேற்றத்துக்குரிய வீடமைப்புக்களை ஏற்படுத்தினார்.

கூட்டு முயற்சியினால் பெருவெற்றியை ஈட்டி ஆஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியில் இடம்பெறுமளவுக்கு தொடர்ச்சியான முன்னேற்றத்தை தனது உழைப்பினால் ஏற்படுத்திவரும் மகா சின்னத்தம்பியின் சொத்துப்பெறுமதி கடந்த வருடம் 1.35 பில்லியன் டொலர்கள் ஆகும்.

2021 இல் மகா சின்னத்தம்பியின் சொத்துப்பெறுமதி 1.78 பில்லியன் டொலர்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க Financial Review பட்டியல்படுத்தியுள்ள  ஆஸ்திரேலியாவின்  இருநூறு செல்வந்தர்களில் முதலாவது இடத்திலிருப்பவர் Gina Rinehart ஆவார்.

ஆஸ்திரேலியாவின் இரும்பு தாது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையை ஆட்சி செய்யும் பெரு முதலாளியான Gina Rinehart-இன் சொத்துக்களின் பெறுமதி 31.06 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இவர் உட்பட இப்பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் விவரங்கள் வருமாறு.

1. Gina Rinehart – $31.06 billion

2. Andrew Forrest – $27.25 billion

3. Mike Cannon-Brookes – $20.18 billion

4. Anthony Pratt and family – $20.09 billion

5. Scott Farquhar – $20 billion

6. Harry Triguboff – $17.27 billion

7. Clive Palmer – $13.01 billion

8. Hui Wing Mau – $11.70 billion

9. Frank Lowy – $8.51 billion

10. Melanie Perkins and Cliff Obrecht – $7.98 billion

The Australian Financial Review- இன் முழுமையான பட்டியலை இந்த இணைப்பில் காணலாம்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now