SKIP TO MAIN CONTENT

92 வயதில் 5வது திருமணம்:ஆஸ்திரேலிய செல்வந்தர் Murdochஇன் அறிவிப்பு உலகெங்கும் வைரல்

உலக ஊடகச் சக்கரவர்த்தியான ஆஸ்திரேலியாவின் Rupert Murdoch, தனது 92வது வயதில் ஐந்தாவது திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள செய்தி ஊடகங்களின் பேசுபொருளாக மாறியுள்ளது.

FrrkXr8WcAATZ9A.jfif
Rupert Murdoch to marry for the fifth time Credit: Twitter NyPost

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமாத் தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் ஜாம்பவானாக விளங்கும், Rupert Murdoch, 66 வயது Ann Lesley Smithஐத் திருமணம் செய்யவுள்ளதாக தமக்குச் சொந்தமான New York Post-நாளேட்டின் ஊடாக அறிவித்திருந்தார்.

மீண்டும் காதலில் விழுவது பதற்றமாய் இருந்ததாகவும், ஆனால் இதுவே தமது கடைசிக் காதலாக இருக்கும் என்றும், தான் மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாடகராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியுமாக இருந்த Ann Lesley Smithஐ கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் நடந்த ஒரு விருந்துபசார நிகழ்வில் வைத்து சந்தித்திருக்கிறார்.

Rupert Murdoch-இன் முதலாவது திருமணம் 1956-ம் ஆண்டு விமானப் பணிப்பெண் ஒருவருடன் நடந்தது. ஆனால், 1967-ம் ஆண்டு இருவரும் விவாகரத்தில் பிரிந்தனர்.

பின்னர் பத்திரிகையாளர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட Murdoch, 1999-ம் ஆண்டு அவரையும் பிரிந்து மூன்றாவதாக சீனாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்து, 2013-ம் ஆண்டு அவரையும் பிரிந்தார். தொடர்ந்து நான்காவதாக model மற்றும் நடிகையான Jerry Hall ஐ 2016-ல் திருமணம் செய்துகொண்ட அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து ஆகியிருந்தது.

முதல் திருமணங்கள் ஊடாக Rupert Murdoch-இற்கு 6 பிள்ளைகள் உள்ளனர்.

இதேவேளை Murdochஇன் சொத்து மதிப்பு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என Forbes தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now