மெல்பனின் தென் கிழக்கு பகுதியிலுள்ள Coco's சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை சென்ற பிரதமர் Scott Morrison, அங்கு தொழில் பயிற்சிக்காக இணைந்திருந்த பெண் ஒருவரின் தலைமுடியைக் கழுவிய காணொளி வைரலாகியுள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகள் தளர்ந்து இயல்புநிலை திரும்பியுள்ள பின்னணியில், இளையவர்கள் வேலையில் இணைந்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் இச்செயற்பாடு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் பிரதமரின் இச்செயல் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தக் காணொளியைப் பகிர்ந்த பலர், தேர்தல் நெருங்கும் வேளையில் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு Morrison நடித்த நாடகம் இது என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
