SKIP TO MAIN CONTENT

சிட்னி விலவூட் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 6 பேருக்கு கோவிட் தொற்று!

Testing is being ramped up at Villawood Immigration Detention Centre after five detainees tested positive.
There are fears for a COVID-19 outbreak at Villawood Immigration Detention Centre. Source: Supplied/SBS News

2 min read

Published

Presented by Renuka


Skip to article content

சிட்னி விலவூட் குடிவரவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த தடுப்புமுகாமில் பணிபுரிபவர்கள் உட்பட அங்குள்ள அனைவரும் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்கண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதேநேரம் கோவிட் பரவலொன்றைக் கையாள்வதற்கான தயார் நிலையுடன் விலவூட் தடுப்புமுகாம் இல்லையெனத் தெரிவித்துள்ள அகதிகள் செயற்பாட்டர்கள், இதுதொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளனர்.

விலவூட் தடுப்புமுகாமில் பெரும் அவலம் ஒன்று ஆரம்பமாவதற்கு காத்திருப்பதாக Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoul தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், பாதுகாப்பான வேறு இடமொன்றுக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள அவர், இனியாவது காலந்தாழ்த்தாது அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் மெல்பன் Park ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now