SKIP TO MAIN CONTENT

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன!

சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான 3 குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளன.

DANUSHKA GUNATHILAKA COURT
Sri Lankan international cricketer Danushka Gunathilaka departs the the Downing Centre Local Court in Sydney, Thursday, April 6, 2023. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING Source: AAP / BIANCA DE MARCHI/AAPIMAGE

1 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலியாவுக்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தின்போது, சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான 4 பாலியல் குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளன.

32 வயதான தனுஷ்க குணதிலக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னியில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

Dating செயலி மூலம் அறிமுகமான தன்னிடம், முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வல்லுறவில் தனுஷ்க ஈடுபட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றிருந்தநிலையில் இவர் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாக அவரது சட்டத்தரணி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனுஷ்க குணதிலக்கவிற்கான பிணை நிபந்தனைகள் கடந்த பெப்ரவரி மாதம் தளர்த்தப்பட்டு, whatsapp, facebook மற்றும் instagram உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதற்கும், இரவில் வெளியே செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் Tinder அல்லது வேறு ஏதேனும் dating செயலிகளைப் பயன்படுத்துவதற்கு குணதிலக்கவிற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now