சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி அவர் மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Dating செயலி மூலம் அறிமுகமான தன்னிடம், முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், தனுஷ்க குணதிலக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டார்.
அவர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 2022 நவம்பரில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட குணதிலக்கவுக்கு, Tinder அல்லது வேறு ஏதேனும் dating செயலிகள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
பிப்ரவரியில் அவரது பிணை நிபந்தனைகள் மாற்றப்பட்டு, whatsapp செயலியைப் பயன்படுத்துவதற்கும், இரவில் வெளியே செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் அவர் மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பவற்றை பயன்படுத்த அனுமதிக்கிறது.
இதேவேளை குணதிலக்கவின் வழக்கு ஏப்ரல் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.