Highlights
- Shane Snellman 2002 ம் ஆண்டு Bruce Roberts வீட்டிற்குள் திருடுவதற்காக நுழைந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
- Shane Snellman-இன் சடலத்தை தனது வீட்டிலேயே 15 ஆண்டுகள் Bruce Roberts மறைத்துவைத்திருக்கிறார்.
- Bruce Roberts 2017ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தனது வீட்டிலேயே மரணமடைந்துவிட்டார்.
Shane Snellman என்ற 39 வயது நபர் 2002 ம் ஆண்டு Bruce Roberts என்ற 46 வயது நபரின் வீட்டிற்குள் திருடுவதற்காக நுழைந்தபோது அவர் Shane Snellman-ஐ துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாக மரணவிசாரணை அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
பின்னர் Shane Snellman-இன் சடலத்தை வெளியே எங்கும் கொண்டு செல்லாது தனது வீட்டிலேயே 15 ஆண்டுகள் Bruce Roberts மறைத்துவைத்திருக்கிறார்.
சடலத்திலிருந்து வரும் துர்நாற்றத்தை மறைப்பதற்கு பலவித வாசனைத்திரவியங்களை பயன்படுத்தியிருக்கிறார்.

இப்படியாக சுமார் 15 ஆண்டுகள் Shane Snellman-இன் சடலத்துடன் வாழ்ந்துவந்த Bruce Roberts 2017ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தனது வீட்டிலேயே மரணமடைந்துவிட்டார்.
இவரது வீட்டின் முன்புறம் பெருந்தொகையான கடிதங்கள் சேகரிக்கப்படாமல் தேங்கிக்கிடந்ததை அடுத்து சந்தேகமடைந்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து Bruce Roberts-இன் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. அத்துடன் 13 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன.
Bruce Roberts-இன் வீடு மற்றும் அறைகள் அனைத்தும் குப்பை கூழங்களால் நிறைக்கப்பட்டிருந்ததால் அங்கு மறைத்துவைக்கப்பட்ட Shane Snellman-இன் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
2018ம் ஆண்டு Bruce Roberts-இன் வீட்டை விற்கும் நோக்கில் அவரது உறவினர்கள் துப்பரவுப் பணிக்கென ஆட்களை நியமித்திருந்ததாகவும் அவர்களே Shane Snellman-இன் எச்சங்களை கண்டுபிடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் பலவித காரணங்களுக்காக பதுங்கி வாழ்ந்த Bruce Roberts தனது வீட்டிற்குள் நுழையமுயன்ற Shane Snellman-ஐ சுட்டுக்கொன்றிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைசென்றிருந்த Shane Snellman அங்கிருந்து வெளியேறிய சில நாட்களில் Bruce Roberts-இன் துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்ததாக குறிப்பிடப்படுகிறது.
எனினும் Bruce Roberts-இன் வீட்டிற்கு Shane Snellman திருடுவதற்காக சென்றிருக்க மாட்டார் எனவும் அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிந்தவர்களாக இருக்கக்கூடும் எனவும் Shane Snellman-இன் உறவினர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
