SKIP TO MAIN CONTENT

வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: அடிலெய்ட் முன்னிலை! மெல்பன், சிட்னி பின்னடைவு!!

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.

Adelaide city CBD at sunrise reflecting in still waters of torrens river
Source: Getty Images

2 min read

Published

Updated


Skip to article content

Highlights

  • The Economist Intelligence Unit புதிய பட்டியலில் நியூசிலாந்தின் இரண்டு நகரங்கள் முன்னிலை பெற்றுள்ளன.
  • இரண்டாமிடத்திலிருந்த மெல்பன் எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்திலிருந்த சிட்னி 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • கோவிட் பரவலை ஒவ்வொரு நகரமும் கையாண்ட விதம் புதிய பட்டியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்களித்துள்ளது.

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தின் Auckland நகரமும் இரண்டாம் இடத்தை ஜப்பானின் Osaka நகரமும் மூன்றாமிடத்தை தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரமும் பிடித்துள்ளன.

தொடர்ந்து பல ஆண்டுகள் முன்னிலையில் இருந்த மெல்பன் தற்போது எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து 2021ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கோவிட் பரவலை ஒவ்வொரு நகரமும் கையாண்ட விதம் புதிய பட்டியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்களித்துள்ளது.

aukland
Auckland, New Zealand Source: AP: Tourism Auckland

Auckland-க்கு 100 க்கு  96 புள்ளிகளும் Osaka-வுக்கு 94.2 புள்ளிகளும் அடிலெய்டுக்கு 94 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

நான்காவது இடத்தில் நியூசிலாந்தின் Wellington நகரமும் ஜப்பானின் Tokyo நகரமும் இடம்பெற்றுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரம் ஆறாவது இடத்தையும் குயின்ஸ்லாந்தின் பிரிஸ்பேன் நகரம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கோவிட் பரவல் காரணமாக உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் 2020ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த ஆஸ்ரியாவின் Vienna நகரம் இவ்வருடம் 12 ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்பன் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்த நிலையில் இவ்வருடம் எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 

2019ம் ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த சிட்னி 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1. Auckland, New Zealand

2. Osaka, Japan

3. Adelaide, Australia

4. Wellington, New Zealand

4. Tokyo, Japan

6. Perth, Australia

7. Zurich, Switzerland

8. Geneva, Switzerland

8. Melbourne, Australia

10. Brisbane, Australia

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now