SKIP TO MAIN CONTENT

பயணத்தடைக்கு மத்தியிலும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம்!

Travelers returning
Source: AAP Image/James Ross

2 min read

Published


Skip to article content

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் இதிலிருந்து விதிவிலக்குப்பெற்று சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உள்துறை அமைச்சிடமிருந்து 9news இத்தரவினைப் பெற்றுள்ளது.

இதன்படி வெளிநாட்டுப் பயணத்தடை நடைமுறைக்கு வந்த காலப்பகுதியான 2020 மார்ச் 25ம் திகதியிலிருந்து டிசம்பர் 31ம் திகதி வரை 105, 028 பேர் வெவ்வேறு காரணங்களின் நிமித்தம் விதிவிலக்குப்பெற்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விதிவிலக்கு பெறுவதற்கான காரணங்களாக வணிகம், குடும்ப விவகாரம் மற்றும் நீண்டகாலப்பகுதிக்கான வெளிநாட்டுப் பயணம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆகக்குறைந்தது 3 மாதங்களுக்கு வெளிநாட்டில் தங்கியிருக்கப்போவதாகத் தெரிவித்த 51,793 பேரின் விதிவிலக்கு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்தபடியாக குடும்ப உறவினர்களின் மரணம், நோய்நிலைமை, தத்தெடுத்தல், வாடகைத்தாய் விவகாரம் மற்றும் பிள்ளைகளை வெளிநாட்டிலிருந்து அழைத்துவருதல் உள்ளிட்ட தவிர்க்கமுடியாத குடும்ப விவகாரங்களைக் காரணமாக காட்டி 31,091 பேர் விதிவிலக்குப் பெற்றுள்ளனர்.

இவ்வாறு விதிவிலக்கு அனுமதிபெற்று 2020 மார்ச் 25ம் திகதியிலிருந்து டிசம்பர் 31ம் திகதி வரை வெளிநாடு சென்றவர்கள் குறித்த விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

Home affairs
Source: Home affairs

இதேவேளை ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமையுடன் வேறொரு நாட்டினதும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறி அங்கு செல்வதற்கு விதிவிலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now