குறித்த இருவரும் மோசடிக் கும்பல் ஒன்றின் அங்கத்தவர்கள் எனவும், ஆஸ்திரேலிய பொலிஸார் போன்று வேடமிட்டு மக்களிடமிருந்து சுமார் 17 ஆயிரம் டொலர்களைத் திருடியுள்ளதாகவும், சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
AFP மற்றும் Services Australia அதிகாரி போன்ற போர்வையில் இவர்கள் மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களையும், கடனட்டை விவரங்களையும், பணத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
குறித்த மோசடி தொடர்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமக்குத் தெரியவந்ததாகவும், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரைத் தொடர்புகொண்டு பேசியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கடந்த அக்டோபர் முதல் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணைகளின் அடிப்படையில், மோசடிக் கும்பலைச்சேர்ந்த இருவர், கடந்த வாரம் சிட்னி மேற்கில் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தியப் பின்னணி கொண்ட 27 மற்றும் 26 வயதுடைய இரு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, SBS மலையாள சேவையிடம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் இருவரது குற்றங்களும் நிரூபிக்கப்படும்பட்சத்தில், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனவும், அதன்பின்னர் நாடுகடத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை பொலிஸார் என்ற போர்வையில் உங்களை யாரேனும் அணுகுவதாக சந்தேகம் எழுந்தால், அவர்களது பெயர் மற்றும் badge இலக்கத்தைக் கேட்டு அவை சரிதானா என்பதை உறுதிப்படுத்த AFP switchboardஐ (02) 5126 0000 என்ற இலக்கத்தில் அழைக்குமாறு ஆஸ்திரேலிய பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
