SKIP TO MAIN CONTENT

உலகின் Top 20 பட்டியலில் இடம்பிடித்துள்ள மூன்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்!

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் முதல் 20 இடங்களுக்குள் ஆஸ்திரேலியாவின் 3 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன.

AUSTRALIAN UNIVERSITIES RANKING
Students enter the University of New South Wales (UNSW) in Sydney on Thursday, Sept. 22, 2016. Source: AAP / DEAN LEWINS/AAPIMAGE

1 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தலை Quacquarelli Symonds (QS) வெளியிட்டுள்ள நிலையில் இதில் 3 ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன.

இத்தரப்படுத்தலின்படி சர்வதேச அளவில் University of Melbourne 14-வது இடத்தையும், University of New South Wales மற்றும் University of Sydney ஆகியன 19-வது இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த ஆண்டு வெளியான QS தரவரிசைப்பட்டியலில் 33-வது இடத்திலிருந்த University of Melbourne தற்போது 19 இடங்கள் முன்னேறி 14வது இடத்திற்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் QS உட்பட மூன்று முக்கிய உலகளாவிய தரவரிசைகளில், மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகமாக அதன் இடத்தை University of Melbourne உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி Times Higher Education தரவரிசையில் 34 வது இடத்தையும், Academic Ranking of World Universities இல் 32 வது இடத்தையும் பெற்றுள்ளது.

இதுதவிர Australian National University 34வது இடத்தையும், Monash University 42வது இடத்தையும், University of Queensland 43வது இடத்தையும் பிடித்துள்ளன.

QS தரவரிசையின்படி உலகின் மிகச்சிறந்த 20 பல்கலைக்கழகங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

2023-07-01_16-01-02.jpg
Credit: QS World University Rankings

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now