விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு கோவிட் தொற்று!

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் சுகாதார அமைச்சர் Martin Foley தெரிவித்தார்.

A person is seen wearing a face mask in Melbourne, Friday, June 4, 2021. Victoria has recorded four new locally acquired cases of coronavirus in the past 24 hours. (AAP Image/James Ross) NO ARCHIVING

A person is seen wearing a face mask in Melbourne Source: AAP

Highlights
  • விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • மெல்பனில் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • விக்டோரியாவில் தற்போது கோவிட் தொற்றுடன் 74 பேர் உள்ளனர்.
சுமார் 15 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் தற்போது கோவிட் தொற்றுடன் 74 பேர் உள்ளனர்.

தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியாத நிலையில் 7 பேர் உள்ளனர்.

Reservoir பகுதியிலுள்ள ஒரே வீட்டைச் சேர்ந்த நால்வர், விக்டோரியாவிலிருந்து குயின்ஸ்லாந்து சென்ற தம்பதியர் மற்றும் இன்று அறிவிக்கப்பட்ட நபர் ஆகியோருக்கே தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று இன்னமும் தெரியவரவில்லை.

இன்று அறிவிக்கப்பட்ட நபர் மெல்பன் நகரைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.
இந்நபர் சென்றுவந்த இடங்கள் exposure sites பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளன.

ஏதேனும் ஒரு தேவைக்காக பின்வரும் இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tier 1 exposure site

Summerhill Medical Centre, inside Summer Hill Shopping Village in Reservoir-June 5 between 8.45am-10.30am

Tier 2 exposure sites

  • Coles Express on Melton Highway in Taylors Lakes on June 1 between 5.30am-5.45am
  • Reform Health Osteopath in Hillside on May 25 between 10am-10.40am
  • The Leveson Restaurant and Bar in North Melbourne on May 22 between 6pm-9pm
  • The Sugar Gum Hotel in Hillside on May 21 between 7pm-9.30pm
  • Burnside Hub Shopping Centre - Angry Beans Cafe on May 21 between 9.40am-9.45am
  • Burnside Hub Shopping Centre - Thio Eyecare Shop on May 21 between 9.40am-10.15am
  • Burnside Hub Shopping Centre - Chemist Warehouse on May 21 between 9.30am-9.40am
  • Souvlaki GR Thornbury on June 7 between 8.14pm-8.45pm
  • Reform Health Osteopath in Hillside on May 26 between 2.55pm-3.40pm
  • Rexel Aust in Thomastown on May 19, 20, 21 between 6.30am-4pm
  • Potto Docklands on May 18 between 11.30am-12pm
  • United Chemists Taylors Hill on May 27 between 3pm-3.30pm
  • Taylors Hill Medical Clinic on May 25 between 10am-11am and May 27 between 11.45am-12.45pm
  • Coles Express on Gourlay Road in Taylors Hill on May 31 between 4.30pm-5pm
இதேவேளை மெல்பனில் திட்டமிட்டபடி நேற்றிலிருந்து முடக்கநிலை நீக்கப்பட்டு கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand