SKIP TO MAIN CONTENT

குளிர்காலத்தில் அதிக மின்சாரம் செலவிடாமல் வீட்டை வெப்பமாக்குவது எப்படி?

உறவும் நட்பும் எப்படியோ, குளிர்காலம் வந்தால் வீட்டினுள் வெப்பநிலை உடலுக்கு ஏற்றவண்ணமாக, கதகதப்பாக இருக்கவேண்டும்; சூட்டுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் இருக்கும்.

electricity_bill.jpg
Source: Getty / Getty Images

4 min read

Published

Updated

By R.Sathiyanathan

Source: SBS


Skip to article content

உறவும் நட்பும் குளிர்காய்வதைப்போல இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். நெருப்புக்கு மிக அருகில் இருந்தால் சுட்டுவிடும்; தள்ளியிருந்தால் குளிர் அகலாது. அதைப்போல உறவிலும் நட்பிலும் நெருடல்கள் வராமலிருக்க சரியான இடைவெளியைப் பேணவேண்டும் என்பதே இதன் பொருளாகும். உறவும் நட்பும் எப்படியோ, குளிர்காலம் வந்தால் வீட்டினுள் வெப்பநிலை உடலுக்கு ஏற்றவண்ணமாக, கதகதப்பாக இருக்கவேண்டும்; சூட்டுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் இருக்கும்.

குளிர்காலத்தில் வீட்டின் உட்புறத்தை அல்லது படுக்கையை அல்லது படுக்கையறையை சூடாக வைத்திருக்க பல உபகரணங்களைப் பயன்படுத்துகிறோம். Wood heaters என்ற விறகு பயன்படுத்தப்படும் heating places ஒரு சில வீடுகளில் மட்டுமே உள்ளன என்ற வகையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் Reverse Cycle Air conditioners/ Ducted air conditioner, gas heaters, electrical heaters மற்றும் electric blankets என்று இவற்றை வகைப்படுத்தலாம். இவற்றை சரியானமுறையில் பயன்படுத்தினால் உச்ச பட்ச பயனைப் பெறமுடியும் என்பதோடு அவற்றுக்கான மின்செலவையும் குறைக்கமுடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

Settlement Guide : What is the best way to heat your home in Australia?
What is the best way to heat your home in Australia? Source: Getty / Getty Images

AC யைப் பயன்படுத்தும்போது அவற்றுக்கான மின்செலவு அதிகமாகாதவகையில் பயன்படுத்த இயலும் என்பதே உண்மை. Air conditioner களை எடுத்துக்கொள்வோம். Reverse cycle மற்றும் Ducted என்ற இரண்டுவகை air conditionerகளும் ஏறக்குறைய ஒரேவிதமாகத்தான் செயல்படுகின்றன. இவை எப்படி இயங்குகின்றன என்று பார்ப்போம்.

குளிர்காலத்தில் இவை வெளியிலுள்ள காற்றில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி வீட்டுக்குள் அனுப்புகின்றன; வீட்டினுள் உள்ள காற்றில் உள்ள குளிரை உறிஞ்சி வெளியே அனுப்புகின்றன. வெளியே வெப்பநிலை 25 C ஆக இருக்கும்போது AC யின் வெப்ப அளவையும் 25C ஆக நிர்ணயம் செய்தால் உங்கள் மின்பாவனை ஏறக்குறைய பூஜ்யமாகத்தான் இருக்கும்.

அதே நேரம் வெளியில் வெப்பநிலை 10C இருக்கும்போது ACயை 25C என்று செட் செய்தால் இந்த வெப்பநிலையைக் கொண்டுவர AC கடுமையாக உழைக்கவேண்டும். வேறு வகையில் சொல்வதென்றால் மிக அதிகமான மின்செலவு ஏற்படும். குளிர்காலத்தில் AC யை 18 தொடக்கம் 20 வரையிலான வெப்பநிலையில் செட்செய்வதால் மின்செலவு குறையும் என்று Australian National University இல் heating systems specialist ஆன senior lecturer டாக்டர் Xoaolin Wang கூறுகிறார்.

Energy saving tips
Energy bills during Winter in Australia Source: SBS

குளிர்காலத்தில் வெளியே உள்ள வெப்பநிலையைவிட 8 பாகை அதிகமாக AC யின் வெப்பநிலை செட் செய்யப்படவேண்டும் என்று consumer advocacy groups ஆன CHOICE சிபாரிசு செய்கிறது.

வீட்டினுள் உள்ள வெப்பம் எவ்வளவு என்று கணிக்கும் temperature monitor ACயில் இருக்கிறது. இதன் காரணமாக AC யை அடிக்கடி on/ off செய்யவேண்டாம் என்பதும் டாக்டர் Wang இன் ஆலோசனையாக இருக்கிறது. AC யை off செய்யும்போது அறையின் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது. மீண்டும் on செய்யும்போது முன்னர் செட் செய்த வெப்ப அளவை எட்ட AC கடுமையாக முயற்சிக்கவேண்டும். இதை ஒரு மலை உச்சியை நெருங்கும் மோட்டார் கார் உச்சியை அடைவதற்கு அதன் என்ஜின் எடுக்கும் பிரயத்தனத்துடன் ஒப்பிடுகிறார் டாக்டர் Wang. ஆகவே வெளியிலுள்ள வெப்பநிலைக்கு சற்றே அதிகமான வெப்பநிலையில் AC யின் வெப்பத்தை நிர்ணயித்தால் வீட்டினுள் உள்ள குளிரும் போய்விடும் ; மின்செலவும் மிகக்குறைவாக இருக்கும். ஒரு 100 கி. மீட்டர் தூரத்தை மோட்டார்காரை இடையில் நிறுத்தாமல் ஓடுவதற்கும் 5 முறை நிறுத்தி மீண்டும் ஸ்டார்ட் செய்து ஓடுவதற்கும் ஆகும் எரிப்பொருள் செலவுடன் இதை ஒப்பிடுகிறார் டாக்டர் Wang.

AC யின் auto என்ற function சூடு அதிகமாகும் போது நிறுத்தவும் சூடு குறையும்போது இயங்கவும் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள smart system ஆகும். ஆனலும் பலவேளைகளில் அதிக வெப்பம் காரணமாக AC தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும்போது அறையின் வெப்பநிலை 16/17C வரை வீழ்ச்சியடையக்கூடும். இந்த வெப்பநிலையை 20-22C க்கு கொண்டுசெல்ல AC ஒவ்வொருமுறையும் கடுமையாக உழைக்கவேண்டும். ஆகவே தொடர்ந்து இரண்டு மூன்று மணித்தியாலங்களக்கு குறைந்தபட்ச வெப்ப நிலையில் ACயை ஓடவிடுவதே சிறந்தது என்றும் இரண்டுமணித்தியாலங்களுக்கு குறைவான காலம் வெளியில் சென்றுவரவேண்டிய அவசியம் அல்லது அவசரம் இருந்தால் கூட ACயை நிறுத்தாமல் இருப்பதே economical - மின்செலவைக்குறைக்கும் வழியாகும் என்றும் சிபாரிசு செய்யப்படுகிறது.

บิลค่าไฟฟ้า
Source: Getty / Getty Images

Electrical heaters and Gas heaters எனபவற்றைப்பொறுத்த அளவில் நாம் கவனிக்கவேண்டிய அம்சங்கள் உள்ளன. அதாவது, காலையில் எழுந்ததும் வெளியே வேலைக்குச்செல்ல ஒருவர் தயாராகுமட்டும் அல்லது மாலைவேளைகளில் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு பயன்படுத்தவும் மட்டுமே உகந்தவை. ஏனென்றால் இவை இயங்க அதிகமான energy எரிபொருள் தேவை. AC போல இவை சிக்கலானவை complex இல்லை என்ற காரணத்தால் இவற்றைப் பலமுறை on/ off செய்வதில் தவறில்லை. ஆனால் இவற்றை வாங்கும்போது இவற்றின் energy rating என்ன என்பதை ஆராய்ந்து வாங்கவேண்டும் என்று Curtin Institute for energy transition இன் பணிப்பாளரான பேராசிரியர் Peta Ashworth கூறுகிறார். மிகப்பழைய heater களைப்பயன் படுத்தவேண்டாம் என்பதும் electrical heaters ஐப்பொறுத்தவரை oil column heaters ஏனையவற்றைவிடச் சிறப்பானவை என்பதும் இவரது கருத்தாகும். சிறிய ஆனால் உரியமுறையில் insulate பட்ட அறையில் இந்த oil column heaterகளை low heat இல், நீண்டநேரம் on செய்து வைப்பதில் தப்பில்லை என்றும் இவர் சொல்கிறார்.

Electric blanket களைப்பொறுத்த அளவில் படுக்கைக்கு செல்ல 1 மணி நேரத்திற்கு முன் இவற்றை on செய்வதும், படுக்கைக்கு சென்றவுடன் off செய்வதும் பாதுகாப்பானது மட்டுமல்ல உடல் dehydration ஏற்படுவதும் தடுக்கப்படும் என்பதே பொதுவான ஆலோசனையாகும். ஆனால் இப்போது timer மற்றும் heat setting உடன் இவை வருவதால் தேவைக்கேற்ப அந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முழு படுக்கையறையையும் வெப்பமாக்குவதைவிட படுக்கையை மட்டும் சூடாக்குவது மின் செலவை வெகுவாக க் குறைக்கும் என்று பேராசிரியர் Ashworth கூறுகிறார்.

Blinds மற்றும் கதவின் அடியில் இடைவெளியை மூடி போடப்படும் snakes என்பவை மூலமாக வீட்டினுள் உள்ள வெப்பத்தை வெளியே போகவிடாமல் தடுப்பது, பயன்படுத்தப்படாத அறைகளை மூடிவைப்பது நீண்ட corridor - இவற்றை தாழ்வாரம் என்று பொதுவாகச்சொல்வதுண்டு. அதை மூடிவைப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது

tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now