கல்வி என்பது வாய்ப்புகளுக்கான ஒரு பாதையாகும். ஆனால் நீண்ட காலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக்குடி பின்னணிகொண்ட மாணவர்கள் அதில் வெற்றி பெற தடைகளை எதிர்கொண்டுள்ளனர். இன்னும் சவால்கள் இருந்தாலும், நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான பூர்வீகக்குடி பின்னணிகொண்ட மாணவர்கள் தற்போது பள்ளியை முடிக்கின்றனர், பல்கலைக்கழகங்கள் பூர்வீக குடியின மக்களின் அறிவை ஏற்றுக்கொள்கின்றன, மேலும் சமூகத்தால் வழிநடத்தப்படும் திட்டங்கள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
ஐரோப்பிய காலனித்துவத்திற்கு முன்பு, பூர்வீகக்குடிமக்களின் கலாச்சாரங்கள் வளமான கல்வி முறைகளைக் கொண்டிருந்தன. அவை நிலம், அறிவு மற்றும் சமூகத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டிருந்தன. இந்த மரபுகள் இன்றும் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
ஆயினும்கூட, கல்வித்துறையில் சமத்துவமின்மை இன்னும் உள்ளது. பூர்வீகக்குடி பின்னணிகொண்ட மாணவர்கள் மத்தியில் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு விகிதங்கள் குறைந்தளவில் உள்ளதுடன் அவர்கள் பள்ளிக்கு வருகை தரும் வீதமும் பல்கலைக்கழக பிரதிநிதித்துவமும் குறைவாகவே உள்ளது.
இதற்கான காரணம் வரலாற்று ரீதியாகவும் தற்போதும் தொடரும் பாகுபாடு, கலாச்சார அடிப்படையிலான கல்வியின் பற்றாக்குறை மற்றும் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் போன்றவையாகும்.

Sharon Davis, CEO of NATSIEC Source: Supplied / Sharon Davis
இந்த மன்னிப்புக்கோரலின் ஒரு பகுதியாக, closing the gap எனப்படும் பூர்வீகக்குடி பின்னணிகொண்டவர்களுக்கும் ஏனைய ஆஸ்திரேலியர்களுக்கும் இடையில் கல்வி உட்பட பல துறைகளில் நிலவும் இடைவெளியை குறைப்பதற்கு உறுதி அளிக்கப்பட்டது.
கல்வி தொடர்பில் நிலவும் இடைவெளியை எவ்வாறு மூடுவது என்பது பற்றி விவாதிக்கும்போது, காலங்காலமாக பூர்வீகக்குடி பின்னணிகொண்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை அங்கீகரிப்பது முக்கியம் என்கிறார் National Aboriginal and Torres Strait Islander Education Corporation (NATSIEC) தலைமை நிர்வாக அதிகாரியும் Bardi மற்றும் Kija சமூகத்தைச் சேர்ந்தவருமான Sharon Davis.
ஆனால், பூர்வீகக்குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள் சந்திக்கும் சமத்துவமின்மையை தீர்க்க, அரசுகள் பூர்வீகக்குடி மக்கள் மற்றும் சமூகங்களுடன் பணியாற்றும் முறையை மாற்றுவது தான் Closing the Gap- இடைவெளியைக் குறைக்கும் தேசிய ஒப்பந்தத்தின் முக்கியமான பகுதி.
இந்நிலையில் குறித்த விடயத்தில் கட்டமைப்பு மாற்றங்கள் அவசியம் என்கிறார் Sharon Davis.
READ MORE

Closing the Gap என்றால் என்ன?
Wollongong பல்கலைக்கழகத்தின் Woolyungah Indigenous Centreஇல் பணிபுரியும் Awabakal, Gameroi மற்றும் Yuin சமூகத்தைச் சேர்ந்தவரான Dr Anthony McKnight, பாடத்திட்டம், கொள்கை மற்றும் நடைமுறையில் பூர்வீகக்குடியினரின் கற்பித்தலை எவ்வாறு உள்வாங்குவது என்பதை கற்பிப்பதிலும் ஆராய்ச்சி செய்வதிலும் பல ஆண்டுகள் செலவிட்டுள்ளார்.
Closing the gap-இடைவெளியை நிரப்புவதன் அர்த்தம் பூர்வீகக்குடிமக்கள் தொடர்பிலான கல்வி சூழலில் மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும் என்று Dr Anthony McKnight நம்புகிறார்.

Dr McKnight has spent years teaching and researching how to embed Aboriginal pedagogy in curriculum, policy, and practice. Source: Supplied / MichaelDavidGray
நியூ சவுத் வேல்ஸில் 12 ஆம் வகுப்பை முடித்த பூர்வீகக்குடி மாணவர்களின் மிகப்பெரிய குழுவில் Retori Laneஉம் ஒருவர்.
Gamilaroi இளம் பெண்ணான இவர் கடந்த ஆண்டு, Dubbo Senior Collegeல் தனது HSCஐ முடித்தார்.
ஆதரவான கற்றல் சூழல் அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தியதாக Retori Lane கூறுகிறார்.
அவரது ஆதரவு வலையமைப்பில் பள்ளி ஊழியர்கள், பூர்வீகக்குடி ஆசிரியர்கள் மற்றும் National Aboriginal Sports Corporation Australia (NASCA)வின் தொழிலாளர்கள் அடங்குவர், இது NSW மற்றும் NT முழுவதும் பூர்வீகக்குடி மாணவர்கள் கலாச்சாரத்துடன் இணைவதற்கும் பள்ளியில் வெற்றி பெறுவதற்கும் உதவும் திட்டங்களை நடத்தும் ஒரு அமைப்பாகும்.

Retori Lane (L) with her mother, Jenadel Lane. Source: Supplied / Retori Lane
தனது குடும்பத்தில் பல்கலைக்கழகம் சென்ற முதல் நபர் இவராவார்.
Retori பூர்வீகக் குடிமக்கள் தொடர்பான ஆய்வுகளில் இளங்கலைப் பட்டம் பெறுவார்.
தனது சமூகத்தில் உள்ள மற்ற இளைஞர்கள் தங்கள் கல்வியில் அதிகாரம் பெறவும், கலாச்சாரத்துடன் மீண்டும் இணைவதற்கும் உதவுவதில் தான் உத்வேகம் பெற்றதாக அவர் கூறுகிறார்.
பூர்வீகக் குடிமக்களின் கண்ணோட்டத்தில், கல்வித்துறையில் காணப்படும் இடைவெளியை மூடுவது என்பது வெறும் விளைவுகளை மேம்படுத்துவது மட்டுமல்ல — இது பூர்வீகக் குடிமக்களின் அறிவை மதிப்பது, சமூகங்களுக்கு வழிகாட்டும் அதிகாரத்தை வழங்குவது, மற்றும் பண்பாட்டு ரீதியாக பாதுகாப்பான இடங்களை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கியது. இது அடையாளம், பெருமை மற்றும் எதிர்கால தலைமுறைகள் தங்களின் பண்பாட்டுடன் தொடர்ந்தும் இணைந்திருக்கச் செய்வதும், அவர்கள் விரும்பும் விதத்தில் வெற்றி பெறுவதையும் உறுதி செய்வதையும் பற்றியது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand