Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தனிமையை எதிர்கொள்ள இயற்கை எவ்வாறு உதவுகிறது ?

Two people pose in front of two collaged pictures on green nature
A local study in Melbourne has found that nature prescribing can help reduce loneliness in LGBTQIA+ migrants and refugees. Credit: Olivia Di Iorio / Nerkez Opacin

சமீபத்தில் நடத்திய ஆய்வில் LGBTQIA+ அடைக்கலம் நாடுபவர்கள் மற்றும் அகதிகள் குறித்த ஒரு ஆய்வில், இயற்கை வெறும் சந்திப்பு இடமாக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் யாராலும் விமர்சிக்கப்படாமல், பாதுகாப்பான ஒரு சூழலாக இருந்துள்ளது.


Published

By Olivia Di Iorio

Presented by Saranya Balakrishnan

Source: SBS




Share this with family and friends


சமீபத்தில் நடத்திய ஆய்வில் LGBTQIA+ அடைக்கலம் நாடுபவர்கள் மற்றும் அகதிகள் குறித்த ஒரு ஆய்வில், இயற்கை வெறும் சந்திப்பு இடமாக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் யாராலும் விமர்சிக்கப்படாமல், பாதுகாப்பான ஒரு சூழலாக இருந்துள்ளது.


தனிமை என்பது இன்றைய சமூகத்தில் பலர் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சவாலாக உள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, புதிய சூழலுக்குத் தங்களைப் பொருத்திக்கொள்வது பல நேரங்களில் தனிமை உணர்வை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இயற்கையுடன் நெருக்கமாக இருப்பது இந்த உணர்வைக் குறைக்க உதவுமா?

மனஅழுத்தத்தைக் குறைப்பதில் இயற்கையின் பங்கு குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, தனிமையையும் சமாளிக்க இயற்கை உதவக்கூடும் என்பதற்கான புதிய ஆதாரங்களும் வெளிவந்துள்ளன.

அன்றாட தொழில்நுட்பப் பயன்பாட்டால் ஏற்படும் மனஅழுத்தத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு, இயற்கையோடு மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி அவற்றைப் பாதுகாக்க Shinrin-yoku எனப்படும் நடைமுறையை ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது . இந்த முறையை (Forest Bathing) என்றும் அழைக்கின்றனர்.

மரத்தின் மணம், ஓடும் நீரோடையின் ஒலி, காடுகள் நிறைந்த இயற்கைக் காட்சிகள் மனித உடலியல் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்ச்சியாளர்கள் 1990களில் ஆய்வு செய்யத் தொடங்கினர். இயற்கைச் சூழலில் நேரம் செலவிடுவது மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

 இயற்கையுடன் நேரம் செலவிடுவதும், வெளியில் நேரம் செலவிடுவதும் நட்புறவுகளை வளர்த்து, தனிமை உணர்வைக் குறைக்க உதவுகிறது.

1980களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Shinrin-yoku’ முதல் , மெல்போர்னில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு வரை, தனிமையை எதிர்கொள்ள இயற்கை எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் ஆராய்கிறோம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Can nature help tackle loneliness?


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now