தவறான மற்றும் பொய்யான தகவல் ஒரு தீவிரமான பிரச்சினை - மேலும் இது தற்போது மிகப்பெரிய உலகளாவிய ஆபத்து என்று பெயரிடப்பட்டுள்ளது.
எனவே - பேச்சுரிமைக்கான நமது உரிமையைப் பாதிக்காமல், தவறான மற்றும் பொய்யான தகவல்களை எப்படி எதிர்த்துப் போராடுவது?
மக்கள் எங்கிருந்தும், எந்த நேரத்திலும், அவர்கள் விரும்பியதைப் பகிர சமூக ஊடகங்கள் அனுமதிக்கிறது.
ஆனால் தவறான தகவல்கள் முன்னெப்போதையும் விட வேகமாக பகிரப்படலாம் என்பதும் இதன் பொருள்.
இப்படி வேகமாக மாறிவரும் சூழலில் - அதாவது சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதைக் கண்டறிவதற்கு நேரம் எடுக்கும்.
மேலும் ஆஸ்திரேலியாவில் இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள் மற்றும் பொய்யான தகவல்களை கண்டறிவதில் அவை தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் Lorraine Finlay வலியுறுத்துகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.