வெறுப்பு எங்கேயிருந்து தோன்றுகிறது? நாம் அனைவரும் வெறுப்பை உணரும் திறன் கொண்டவர்களா? என்ற கேள்வியை முன்வைக்கிறார் மெல்பன் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் Nick Haslam.
2020-ம் ஆண்டு, கோவிட் பேரிடர் காலத்தில் ஆசிய-ஆஸ்திரேலியர்கள் எதிர்கொண்ட இனவெறி அனுபவங்களைப் பற்றி ஆராய்ந்த போது, Erin Wen Ai Chew ஒரு முக்கியமான முடிவுக்கு வந்துள்ளார். தவறான மற்றும் பொய்யாக பரப்பப்படும் தகவல்கள், அவரது சமூகத்தின் மீது அறியாமை மற்றும் வெறுப்பை உருவாக்கும் முக்கிய காரணிகளாக இருந்தன என்று கண்டறிந்துள்ளார்.
மற்றவர்களின் மீது கோபம் அல்லது எதிர்ப்பு உணர்வுகள் ஏற்படுவது நியாயமானதாக இருக்கலாம். ஆனால், அந்த உணர்வுகளை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது முக்கியம்.
பிறரின் கருத்துக்களை எப்படிக் கவனிக்கலாம்? திறந்த மனதுடன், ஆர்வத்துடன் எப்படிச் கேட்டறியலாம்? இதெல்லாம் வெறுப்பு தோன்றுவதை தவிர்க்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என Ethics Centre–இன் Dr Tim Dean கூறுகிறார்.
SBS Examines -இற்காக Nic Zoumboulis ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழிலில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.