புத்தாண்டு தினத்தன்று சிட்னியிலுள்ள தமிழர் செறிந்து வாழும் Homebush West பகுதியில் அமைந்துள்ள Pyramid Video & Spice கடையினுள் Van ஒன்று புகுந்து, ஓர் அதிர்ச்சியூட்டும் விபத்து ஏற்பட்டிருந்தது. இவ்விபத்துப் பற்றி அக்கடையின் உரிமையாளர் சுந்தரலிங்கம் செல்லத்துரை(லிங்கம்) அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அத்துடன் ஆபத்தான அந்த விபத்தில் சிக்கியிருந்த பெண்ணுக்கு உதவி, அவரின் உயிரைக் காப்பாற்றிய சிவா சிவராஜ் அவர்கள் ஆம்புலன்சுக்காகக் காத்திருந்த அவர்களின் அத் தருணங்களை எம்முடன் வெளிப்படுத்துகிறார். செய்தியின் பின்னணிக்காக நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desiஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




