ஜூன் 18 ஆம் தேதியை வெறுப்புப் பேச்சிற்கு எதிரான சர்வதேச தினமாக ஐ.நா அறிவித்தது.
வெறுப்புப் பேச்சை எவ்வாறு அடையாளம் காணலாம், கையாளலாம் மற்றும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ள இந்த நாள் நம்மை ஊக்குவிக்கிறது.
பிப்ரவரியில், பெடரல் நாடாளுமன்றம் வெறுப்புக் குற்றங்கள் குறித்த குற்றவியல் சட்டத் திருத்ததிற்கான சட்டமுன்வடிவை நிறைவேற்றியது. இது 1995 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் ஏற்கனவே உள்ள வெறுப்புக் குற்ற விதிகளில் மாற்றங்களைச் செய்ய கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் ஆகும்.
சமீபத்திய யூத எதிர்ப்பு வன்முறைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவின் தற்போதைய சட்டங்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று இந்த சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய முன்னாள் Attorney-General Mark Dreyfus கூறினார்.
SBS Examines ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.