Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

யூத விரோதம் (antisemitism) பற்றி குழந்தைகளுடன் நாம் எப்படி பேச வேண்டும்?

U18 Germany And U18 Israel - Yad Vashem Visit

Experts told SBS Examines it's harder to navigate conversations about antisemitism with teenagers, as they spend more time online. (Photo by Lior Mizrahi/Bongarts/Getty Images) Source: Getty / Lior Mizrahi/Bongarts/Getty Images

ஆஸ்திரேலியாவில் யூத விரோதம் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று ராயல் கமிஷன் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. யுத்த விரோதம் குறித்து குழந்தைகளுக்கு ஏற்ப எப்படி பேச வேண்டும்?


Published

Updated

By Lera Shvets

Presented by Saranya Balakrishnan

Source: SBS




Share this with family and friends


ஆஸ்திரேலியாவில் யூத விரோதம் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று ராயல் கமிஷன் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. யுத்த விரோதம் குறித்து குழந்தைகளுக்கு ஏற்ப எப்படி பேச வேண்டும்?


யூத விரோதம் (antisemitism) பற்றி குழந்தைகளுடன் எப்படி பேசுவது என்று ஆலோசனை கேட்கும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன.

“மக்கள் யூதர்களை ஏன் வெறுக்கிறார்கள்? நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா? எங்கள் பள்ளியில் ஏன் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள்?” என்ற கேள்விகள் குழந்தைகளுக்குள் எழுகின்றன.

ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ப வேறுபட்ட முறையில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார் Amanda Gordon.

மிகவும் சிறிய குழந்தைகளுக்கும் அன்பு, நியாயம் மற்றும் பல்கலாச்சார முக்கியத்துவத்தை புரிய வைக்க முடியும். அரசியல் விளக்கங்கள் தேவையில்லை, ஆனால் நல்ல நடத்தை, கருணை மற்றும் மரியாதை பற்றி பேசலாம் என்று கூறுகிறார் Olga Weintraub Elia.

வாலிபர்களுடன் யூத விரோதம் பற்றி பேசுவது கடினம்.

“அவர்கள் யூத விரோதத்தை பார்த்தார்களா என்பது அல்ல; எப்போது பார்த்தார்கள் என்பதே கேள்வி.”

ஏனெனில் அவர்கள் இணையத்தில் பார்க்கும் விஷயங்கள் எங்கு இருந்து வந்தது, அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதன் புரிதல் இல்லாமல் இருக்கலாம் என்று கூறுகிறார் பள்ளி ஆசிரியை Shoshana.

யூத விரோதம் பற்றி குழந்தைகளுடன் நாம் எப்படிப் பேச வேண்டும் என்பதை இந்த வாரம் SBS Examines நிகழ்ச்சியில் கேட்கலாம்.

அவசர உதவி தேவைப்படுவோர் Lifeline (13 11 14) மற்றும் Kids Helpline (1800 55 1800) ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


How should we talk to children about antisemitism?


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now