குடும்பங்களைப் பொறுத்தவரை ஒரு குழந்தையை எதிர்பார்ப்பது ஒரு சிறப்பான மற்றும் உற்சாகமான நேரம், ஆனால் அது நிதி அழுத்தத்தையும் கொண்டு வரலாம்.
ஆஸ்திரேலிய அரசிடமிருந்தும் முதலாளிகளிடமிருந்தும் கிடைக்கும் parental leave கொடுப்பனவுகள் இந்தச் சுமையைக் குறைக்க உதவும். இதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தையை வீட்டிலிருந்தே பராமரிக்கும் அதேநேரம் வருமானத்தையும் பெற முடியும்.
குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் parental leave கொடுப்பனவு முக்கியமானது என்று கூறுகிறார் Multicultural Centre for Women's Health தலைமை நிர்வாக அதிகாரி Dr Adele Murdolo.
Parental leave pay என்பது ஆஸ்திரேலிய அரசின் ஒரு கொடுப்பனவாகும். இது புதிதாகப் பிறந்த அல்லது இரண்டு வயதுக்குட்பட்ட புதிதாக தத்தெடுக்கப்பட்ட குழந்தையைப் பராமரிக்கவென பெற்றோர் வேலையில் இருந்து விடுப்பு எடுக்க உதவுகிறது.
ஆஸ்திரேலியாவில் இந்த கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் மிகவும் நெகிழ்வானவை எனவும் தற்போது 22 வாரங்கள் வரை கொடுக்கப்படும் இப்பணம் 2025 ஜூலை 1 ஆம் தேதி முதல் 24 வாரங்களாக அதிகரிக்கிறது எனவும் விளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசின் Parental Leave Pay schemeஐ நிர்வகிக்கும் Services Australiaவின் பொது மேலாளர் Hank Jongen.

தேசிய குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில், ஐந்து நாள் வேலை வாரத்திற்கு 915.80 டொலர்கள் parental leave கொடுப்பனவு வழங்கப்படும்.
இதற்குத் தகுதி பெற, நீங்கள் குழந்தையின் முதன்மை பராமரிப்பாளராக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு work and income test ஐயும் சந்திக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை இருக்க வேண்டும் அல்லது சில விசா நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று Hank Jongen கூறுகிறார்.
குழந்தை பிறப்பதற்கு அல்லது தத்தெடுக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நீங்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்திருக்க வேண்டும். வெளிநாட்டில் நீங்கள் செலவழித்த நேரம் இந்தக் காலப்பகுதியில் சேர்க்கப்படாது.
இக்கொடுப்பனவைப் பெறுவதற்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை Services Australia வலைத்தளமான servicesaustralia.gov.au இல் நீங்கள் சரிபார்க்கலாம்.
பின்னர், நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.உங்கள் myGov கணக்கு வழியாக Centrelink மூலம் விண்ணப்பிக்குமாறு Hank Jongen பரிந்துரைக்கிறார்.

Parental leave கொடுப்பனவைப் பெறுவதற்கு இரு பெற்றோர்களும் தகுதியுடையவர்களாக இருந்தால் அதை அவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்று Hank Jongen விளக்குகிறார்.
Parental leave பற்றிய சிறந்த விடயங்களில் ஒன்று, தாய் மற்றும் தந்தை இருவருக்கும் பெற்றோர்களாக அவர்களது முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதும் அவர்களது பொறுப்பை உணர்த்துவதுமாகும் என்கிறார் Dr Adele Murdolo.
கொடுப்பனவுடனான பெற்றோர் விடுப்பை ஒரே நேரத்தில் அல்லது தொகுதிகளாக எடுக்கலாம். கொடுப்பனவு பெறும் காலப்பகுதியில் நீங்கள் வேலை செய்ய முடியாது என்று Hank Jongen கூறுகிறார்.
ஏதோவொரு காரணத்தினால் குழந்தை இறந்தநிலையில் பிறந்தாலோ அல்லது பிறந்த பின்னர் இறந்தாலும்கூட தகுதியுடைய பெற்றோருக்கு parental leave கொடுப்பனவு கிடைக்கிறது.
Parental leave கொடுப்பனவு பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய, பல மொழிகளில் தகவல்களை வழங்கும் Services Australia வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
சில முதலாளிகள் பிரத்தியேகமாக parental leave கொடுப்பனவுகளை வழங்குகிறார்கள்.இதற்கான தகுதி மற்றும் விதிகள் வேறுபடுகின்றன, எனவே உங்கள் பணியிடத்தின் human resources துறையுடன் சரிபார்த்து உங்கள் பணி ஒப்பந்தத்தையும் சரிபார்ப்பது முக்கியம்.
இரண்டரை வயது குழந்தையின் தந்தை Afnan Malik அரசினதும் அவரது முதலாளியினதும் parental leave கொடுப்பனவிற்கு தகுதியுடையவர் என்றபோதிலும் தனக்கிருந்த உரிமைகளை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என அவர் கூறுகிறார்.
மீண்டும் தந்தையாகும் நிலை எழுந்தால் தனது முதலாளியிடம் சென்று, விரிவாக உரையாடி தனக்கான உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ளவுள்ளதாக Afnan Malik தெரிவித்தார்.

பெற்றோர் விடுப்பு குறித்து வேலையில் உங்கள் உரிமைகள் என்ன என்பதை இருமுறை சரிபார்க்குமாறு ஊக்குவிக்கும் Dr Adele Murdolo இவ்விடயம் தொடர்பில் உதவிகளை வழங்கும் jobwatch போன்ற ஒரு நிறுவனத்தை அணுகலாம் எனவும் பரிந்துரைக்கிறார்.
ஒரு முதலாளியிடம் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் ஊதியம் பெறாத பெற்றோர் விடுப்புக்கு தகுதியுடையவர்களாவர்.
Parental leave கொடுப்பனவு ஒரு மதிப்புமிக்க ஆதரவாக இருந்தாலும், இதற்குத் தகுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தான் காணவிரும்புவதாக Dr Adele Murdolo சொல்கிறார்.
Subscribe to or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
Do you have any questions or topic ideas? Send us an email to australiaexplained@sbs.com.au
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in
page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.











