ஆஸ்திரேலியாவில் பொறியாளராக வேலை செய்வது எப்படி: அங்கீகாரம், வேலை வாய்ப்புகள் மற்றும் தொடர்புகள்

WIP_engineering_stock_pop.jpg

Migrant engineers are expected to power 70 per cent of the Australia’s workforce growth in this critical industry.

ஆஸ்திரேலியாவில் பொறியியல் துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது, ஆனால் பல புலம்பெயர்ந்த பொறியாளர்கள் தகுந்த வேலை வாய்ப்புகளை பெற முடியாமல் உள்ளனர். இந்தப்பின்னணியில் பொறியியல் பணிக்கான தகுதிச் சான்றிதழ் அங்கீகாரம், வேலை தேடல் குறிப்பு, சுயவிவர (CV) ஆலோசனைகள் மற்றும் தொழில்முறை தொடர்புகளை உருவாக்கும் முறைகள் குறித்து அறிந்துகொள்வோம்.


இந்தக் கட்டுரை, ஆஸ்திரேலியாவில் அர்த்தமுள்ள தொழில்களைக் கட்டியெழுப்பும் திறமையான புலம்பெயர்ந்தோரின் பயணங்களை ஆராயும் 'Australia Explained '- இன் 'Work in Progress' தொடரிலிருந்து நடைமுறை குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இதன் அனைத்து அத்தியாயங்களையும் கேளுங்கள்.

சாக்லேட் தொழிற்சாலையில் பணிபுரிவதிலிருந்து நீர் துறையில் வடிவமைப்பு மேலாளராக மாறிய ஈரானிய இயந்திர பொறியாளர் Hannah Talebiயின் கதையை இந்த அத்தியாயம் கொண்டுள்ளது - புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சவால்கள் மற்றும் தன்னம்பிக்கையையும் இந்த அத்தியாயம் எடுத்துக்காட்டுகிறது.
ஆஸ்திரேலியா கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பொறியியல் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
பொறியாளர்களுக்கான தேவை வளர்ந்து கொண்டு இருந்தபோதிலும், தகுதி அடிப்படையில் குடியேற்றவாசிகளாக வந்துள்ள பொறியாளர்களில் சுமார் 40 சதவீதம் பேர் மட்டுமே தற்போது பொறியியல் துறையில் ஒரு பொறியாளராகப் பணிபுரிகின்றனர்.

வெளிநாட்டில் பிறந்த பொறியாளர்கள் ஆஸ்திரேலியாவின் பொறியியல் துறையை இயக்கும் முக்கிய சக்தியாக உள்ளனர். இன்று, 60 சதவீதத்திற்கு மேலான பொறியாளர்கள் புலம்பெயர் பின்னணியிலிருந்து வருகிறார்கள், இதில் பெண்கள் 74 சதவீதம் பங்கு விகிதத்துடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

அடுத்த ஆண்டுக்குள் – அதாவது 2026 ஆம் ஆண்டுக்குள், இந்த நாட்டிலே பொறியியல் துறையில் பணியாற்றுபவர்களில் 70 சதவீதமானவர்கள் வெளிநாட்டில் பிறந்த பொறியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hannah Talebi with Bernadette Foley, Engineers Australia chief engineer..jpg
Hannah Talebi with Bernadette Foley, Engineers Australia chief engineer.

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த பொறியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

அதிக தேவை இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான திறமையான புலம்பெயர்ந்த பொறியாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இதற்கான முக்கிய தடைகளில் பின்வருவன அடங்கும்:
  • உள்நாட்டு வேலை அனுபவத்தின் குறைவு
  • தொழில்முறை தொடர்புகளின் குறைவு
  • சிக்கலான அங்கீகார செயல்முறைகள்
  • புதிய வேலைவாய்ப்பு முறைமைகள் பற்றிய அறிமுகமின்மை
இத்தகைய நிலையிலிருந்து சாதனை படைத்தவர் ஈரானிய இயந்திர பொறியாளர் Hannah Talebi. தற்போது அவர் Engineers Australia–யின் Mechanical College தேசிய வாரியத்தின் உறுப்பினர், ஆனால் தனது பயணத்தை தற்காலிக விசாவில், உள்நாட்டு அனுபவமோ, தொடர்புகளோ இல்லாமல் துவக்கியவர் — இது பல புலம்பெயர்ந்த பொறியாளர்களின் சாதாரண கதை ஆகும்.

புலம்பெயர்ந்த பொறியாளர்கள் தங்களது தகுதிகளை எவ்வாறு மதிப்பீட்டிற்கு உட்படுத்தலாம்?

Shellie McDonald, Engineers Australia–இல் பொறியியல் திறன் மேலாண்மை மூத்த மேலாளராக உள்ளார். Engineers Australia என்பது பொறியியல் தொழிலில் தேவையான திறன்கள் மற்றும் தகுதிகளை மதிப்பீடு செய்ய அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும்.

வெளிநாட்டு தகுதிகளை சான்றளித்தல் சிக்கலான பணியாக இருந்தாலும், முதன்மையான அவசியமான படியாகும் என அவர் சொல்கிறார்.
வெளிநாட்டுத் தகுதிகளை அங்கீகரிப்பது சிக்கலானது. விசா பெறுவதும், பொறியியல் பணிக்கான உங்கள் தகுதிகளை மதிப்பிடுவதும் இரண்டு வெவ்வேறு செயல்முறைகள்.
Shellie McDonald
கடந்த நிதியாண்டில் மட்டும், சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற 28,000 பொறியாளர்கள் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். சர்வதேச ஒப்பந்தங்கள் சில தரநிலைகளை நிர்ணயிக்கும் அதே வேளையில், பதிவுத் தேவைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம்.
Naishadh Gadani works as a career counsellor at Monash University,.jpg
Naishadh Gadani works as a career counsellor at Monash University.

ஆஸ்திரேலியாவில் பொறியாளராக வேலை செய்ய பதிவு அவசியமா?

இது மாநிலத்தைப் பொறுத்தது. சில மாநிலங்களில் பொறியாளர்களின் பதிவு சட்டப்படி கட்டாயமாகவே உள்ளது, ஆனால் சில மாநிலங்களில் அது அவசியம் அல்ல. இருப்பினும், Engineers Australia-இலிருந்து அங்கீகாரம் பெறுதல் சிறந்த தொழில்முறை வாய்ப்புகளை அணுகுவதற்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

புலம்பெயர்ந்த பொறியாளர்கள் ஆஸ்திரேலியாவில் வேலைகளை கண்டுபிடிக்க சிரமப்படுவதற்கான காரணங்கள் எவை?

தனது முதல் பொறியியல் வேலையைப் பெறுவதற்கு முன்பு, Hannah 100 க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தார்- பெரும்பாலும் அவை தொடக்க நிலை பட்டதாரி பதவிகள்.

"எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனக்கு ஒன்று அல்லது இரண்டு நேர்காணல்கள் இருந்திருக்கலாம், ஆனால் பின்னர் நிராகரிப்புக்குப் பிறகு நிராகரிப்பு" என்று அவர் நினைவு கூருகிறார்.
உள்நாட்டு அனுபவம் இல்லாமை மற்றும் குறைந்த தொழில்முறை தொடர்புகள், உயர் தகுதிகள் கொண்ட பொறியாளர்களுக்குகூட மீண்டும் மீண்டும் நிராகரிப்புகளுக்கு வழிசமைக்கின்றன.

ஆஸ்திரேலிய வேலை சந்தைக்கு ஏற்ப பொறியாளர்கள் தங்கள் CV-ஐ எப்படி எழுத வேண்டும்?

ஆஸ்திரேலியாவில் CV-கள் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறார் தொழில்முறை ஆலோசகரும் முன்னாள் பொறியாளருமான Naishadh Gadani.
உங்களுக்குத் திட்ட மேலாண்மை அனுபவம் இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டால், ‘எனக்கு, திட்ட மேலாண்மை அனுபவம் இருக்கிறது’ என்று மட்டும் நீங்கள் எழுதக்கூடாது. மாறாக, ‘நான் ஐந்து ஆண்டுகளாக உட்கட்டமைப்பு திட்டத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றியுள்ளேன், அங்கு நான் $ 10 மில்லியன் மதிப்புள்ள திட்டத்தை நிர்வகித்தேன்,’ என்று கூறவேண்டும். முதலாளிகள் பார்க்க விரும்புவது இதுதான்.
Naishadh Gadani
தனிப்பட்டதாகவும், முடிவுகளை முன்னிறுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட CV பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் முக்கியக் காரணி ஆகும்.
Shellie McDonald, Senior Manager of Engineering Talent at Engineers Australia.jpg
Shellie McDonald, Senior Manager of Engineering Talent at Engineers Australia.

புலம்பெயர்ந்த பொறியாளர்கள் தொடர்புகளை உருவாக்குவது எவ்வளவு முக்கியம்?

தனது தொழில்முறை முன்னேற்றம் வேலைக்கான விண்ணப்பங்களின் மூலம் கிடைக்கவில்லை எனவும், பதிலாக, அடிலெய்டில் உள்ள ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்யும் போது தனது தொழில்நுட்ப திறன்கள் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்ததன் காரணமாக பொறியியல் பணிக்கான வாய்ப்பு வந்த போது அதற்கு விண்ணப்பிக்குமாறு தான் ஊக்குவிக்கப்பட்டதாகவும் Hannah கூறுகிறார்.
புதிதாகக் குடி வந்த ஒருவருக்கு, அவர் வேறு எங்காவது படித்தவர் என்பதால், தொழில்முறை சார்ந்து யாரையும் தெரியாது என்பதால், நெட்வொர்க் அவரிடம் இல்லை என்பதால் தடைகளை உடைத்து வேலை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
Hannah Talebi
நெட்வொர்க்கிங் Hannahவுக்கு, வேலைவாய்ப்பு தளங்களில் ஒருபோதும் அறிவிக்கப்படாத வாய்ப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட சந்தர்ப்பம் அளித்தது.

ஆஸ்திரேலியாவில் பொறியாளர்களுக்கான 'மறைந்திருக்கும் வேலை சந்தை' என்றால் என்ன?

முக்கால்வாசி வேலைகள் ஒருபோதும் விளம்பரப்படுத்தப்படுவதில்லை என்று Naishadh Gadani சுட்டிக்காட்டுகிறார். ஆட்சேர்ப்பு விலை உயர்ந்ததாகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் விடயமாகவும் இருப்பதால் முதலாளிகள் பரிந்துரைகளை விரும்புகிறார்கள்.

அதாவது நெட்வொர்க்கிங், பெரும்பாலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது போலவே முக்கியமானது.

மக்களிடம் பேசுங்கள் என அறிவுறுத்தும் Hannah, உங்களுக்கு உதவும் அந்த ஒரு நபர் யார் என்று உங்களுக்குத் தெரியாது எனவும், நீங்கள் ஒரு குமிழியில் இருந்தால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியாது எனவும் அறிவுறுத்துகிறார்.
பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியிடும் நேரத்தில் அவை துல்லியமானவை. மிகவும் புதுப்பித்த மற்றும் விரிவான தகவலுக்கு, தயவுசெய்துEngineers Australia மற்றும்Australian Government Department of Home Affairsஐ நேரடியாக அணுகவும். தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆலோசனை பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand