பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள் தங்கள் கலாச்சாரக் கதைகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் நிலத்தைப் பற்றிய அத்தியாவசிய அறிவை அடுத்தடுத்த தலைமுறைக்களுக்கு கடத்துவதற்கு ஓவியக்கலையை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தினர்.
ஓவியக்கலை ஒரு சாளரமாக செயல்படுகிறது, இதன் மூலம் ஒருவர் பூர்வீகக்குடிமக்களின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் படைப்பு மரபுகளுக்கான ஆழ்ந்த புரிதலைப் பெற முடியும்.
பூர்வீகக் கலை என்பது பரந்த அளவிலான பாணிகள் மற்றும் நுட்பங்களை உள்ளடக்கியது. அவை ஒவ்வொன்றும் பூர்வீகக் குடிமக்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
பூர்வீகக் குடிமக்களின் கலை என்றால் என்ன என்பது பற்றி மக்கள் பெரும்பாலும் தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளனர் எனவும் புள்ளி ஓவியம் மட்டும்தான் பூர்வீகக்குடியின கலையின் ஒரே உண்மையான வடிவம் என நினைக்கின்றனர் எனவும் கூறுகிறார் பூர்வீகக் குடியின கலாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமுள்ள கலைஞர் Wiradyuri தேசத்தின் Koori பெண் Maria Watson-Trudgett.
உண்மையில், புள்ளி-ஓவியம் 1970களில் Papunyaவிலிருந்து ஆரம்பித்த Western Desert art movementஇலிருந்தே வெளிப்பட்டது. இந்த சிறிய பூர்வீகக் குடியின சமூகம் Alice Springsஸின் வடமேற்கே அமைந்துள்ளது. அங்குதான் பூர்வீகக்குடியின கலைஞர்கள் தங்கள் பாரம்பரிய கதைகளை பலகைகளில் acrylic வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி வரையத் தொடங்கினர்.
முழுநேர பல்கலைக்கழக படிப்புகளின் அழுத்தத்திலிருந்து ஓய்வெடுக்கவென 2009 இல் தான் ஓவியம் வரையத் தொடங்கியதாகவும், ஆனால் கலை என்பது மனதை அமைதிப்படுத்துவதற்கான வழியை விட அதிக நன்மைகளைக் கொண்டுவருவதை தான் உணர்ந்துகொண்டதாகவும் Watson-Trudgett சொல்கிறார்.
Watson-Trudgettஇன் ஓவியக்கலை என்பது abstract art மற்றும் கலாச்சார மையக்கருத்துகளின் சமகால இணைவு ஆகும். இதில் கோடுகள் மற்றும் பூர்வீகக்குடியின சின்னங்கள் பயன்படுத்தப்படுகிறது.
Gamilaraay/Bigambul மற்றும் Yorta Yorta கலைஞரான Arkeria Rose Armstrongகிற்கு, ஓவியக்கலை எப்போதும் அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.

Arkeria Rose Armstrongகின் ஓவியங்களில் கலைஞர்களாக இருந்த அவரது தாத்தா பாட்டி பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றனர். அவரது பாட்டி பிரபல மணல் ஓவியர்களில் ஒருவராவார்.
தன்னுடைய தாத்தாவிடமிருந்து ஓவிய நுட்பங்களைக் கற்றுக் கொண்டதாக Arkeria Rose Armstrong சொல்கிறார்.
தனது கலையை இரு தேசங்களின் இணைப்பாகக் கருதும் Arkeria Rose Armstrong இதனைத் தனது மகளுக்கும் கற்றுக்கொடுக்கிறார்.
Davinder Hart, மேற்கு ஆஸ்திரேலியாவின் Noongar தேசத்தைச் சேர்ந்த ஒரு ஓவியக் கலைஞர்.
தனது ஆரம்ப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சவால்களை இவர் சந்தித்தார். 16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறினார், வேலை தேடுவதில் சிரமப்பட்டார், போதைப்பொருள் பாவனையுடன் போராடினார்.
இருப்பினும், அவரது மாமாக்கள் மற்றும் சகோதரர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் அவரது வாழ்க்கையை மாற்றுவதற்கு உதவியாக இருந்தது.
தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட விடயங்கள் பெரும்பாலும் தனது கலைப்படைப்பில் பிரதிபலிக்கிறது என Davinder Hart தெரிவித்தார்.

கலை என்பது கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கான ஒரு வழி மட்டுமல்ல, அது ஒரு குணப்படுத்தும் வடிவமாகும் என்றும் Davinder Hart கூறுகிறார்.
பூர்வீகக் குடியினரல்லாத மக்களுக்கு, பூர்வீகக்குடியினரின் ஓவியங்கள் அவர்களின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் படைப்பு மரபுகள் பற்றிய ஆழ்ந்த புரிதலை அளிக்கும்.
கலைப்படைப்பில் சொல்லப்பட்ட கதைகளைப் பற்றி கேட்பது ஒரு சிறந்த தொடக்க புள்ளியாக அமையும் என்கிறார் Rose Armstrong Davinder Hart.
தனது சொந்த கண்காட்சிகளில் இருப்பதையும், கலைப்படைப்புகளைப் பற்றி மக்களுடன் கலந்துரையாடுவதையும் Davinder Hart விரும்புகிறார்.
கலைப்படைப்புக்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்பது இணைப்புகளை உருவாக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.









