ஆஸ்திரேலியாவில் voluntary assisted dying என்று மற்றொருவர் உதவியுடன் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு சட்டத்தில் வழி இருக்கிறது. கடைசியாக இந்த சட்டத்தை அறிமுகப்படுத்திய NSW மாநிலத்திலும், கடந்த வாரம் நவம்பர் 28ஆம் தேதி மற்றொருவர் உதவியுடன் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ACT மற்றும் NT பிராந்தியங்களில் இப்படி உயிரை மாய்த்துக் கொள்வதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சிட்னியில் பல வருடங்களாகக் குடும்ப மருத்துவராகக் கடமையாற்றும் Dr நளாயினி சுகிர்தன், மற்றும் கன்பராவில் palliative care – நோய்த் தடுப்பு பராமரிப்பில் ஈடுபட்டிருக்கும் Dr சிவராஜ் ராஜதுரை ஆகியோரின் கருத்துகளுடன் இது குறித்த செய்திகளின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





