நோபல் வென்ற பிராயன் பால்ஷிமிட்!

Source: SBS
பேராசிரியர் பிராயன் பால் ஷிமிட் அவர்கள் 2011-ஆம் ஆண்டில் இயற்பியல் துறை சார்ந்த நோபல் பரிசினை தனது ஆராய்ச்சி குழுவினருடன் பெற்றார், சூப்பர் நோவாக்கள் எனும் வெடிக்கும் நட்சத்திரங்கள் வெளிபடுத்தும் ஒளிகற்றைகளின் பிரகாசம் மற்றும் அவை வெடிக்கும் கோளத்தின் மத்தியிலிருந்து விலகி இருக்கும் தூரங்களையும் கணடுகிட் டு அதன் மூலம் அண்டம் விரிவாகும் வேகம் அதிகரித்து வருகிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. அண்ட வெளியில் இதுவரையிலும் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்படாத பரந்து விரிந்து காணப்படும் “இருட்டு உலகத்தின் சக்தியானது” அண்டம் விரிவடைவதை முடுக்கி விடுவதாகவும், புவியீர்ப்பு விசையால் மட்டும் அண்டம் விரிவதை மட்டு படுத்த இயலாது என்ற கருத்தும், பிராயன் பால் ஷிமிட் அவர்கள் ஆராய்ச்சியின் விளைவாக நம்பப்படுகிறது. இவர் குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.
Share



