2017 ஆம் ஆண்டில், Wajuk, Balardung, Kija மற்றும் Yulparitja மனிதர் Clinton Pryor, பூர்வீகக்குடியின சமூகங்களுக்குள் நிலவும் வறுமை மற்றும் சமூகமாக வாழ்வதை கட்டாயப்படுத்தி முடிவுக்கு கொண்டு வருவதை எதிர்த்து நடைபயணம் மேற்கொண்டார்.
பெர்த்திலிருந்து கன்பரா வரையிலான 6,000 கி.மீ தூரத்தை ஒரு வருடத்தில் நடைபயணமாக Clinton நடந்து முடித்தார். அப்போது Alfred Pek என்ற பத்திரிகையாளரிடமிருந்து அவருக்கு பேஸ்புக்கில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
Clinton அவர்களின் கதையைப் பகிர்ந்து கொள்ள Alfred உதவ விரும்பினார்.
இந்த நடைப்பயணத்தை ஆவணப்படுத்துவதன் மூலம் புலம்பெயர்ந்த சமூகத்துடன் அதனை அதிகமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அதோடு தானும் அதனை கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் Alfred கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் தனது பங்களிப்பைச் செய்ய விரும்பினார் என்று Clinton SBS Examines-இடம் கூறினார்.
Alfred Pek தனது பதின்மவயதில் இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பிறகு , பூர்வீகக்குடி மக்களின் அவல நிலையைப் பற்றி விரைவாகக் கற்றுக்கொண்டதாக கூறுகிறார் Alfred.
அந்த நடைபயணம் உண்மையாகவே நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்தது என்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பது முக்கியம் என்றும் Clinton கூறுகிறார்.
ஏனென்றால் அதுவே பூர்வீகக்குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கும் பன்முக கலாச்சார ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான நட்பை வளர்ப்பதற்கான முக்கிய அம்சமாகும் என்கிறார் Clinton.
சங்கர் காசிநாதன், National Center for Reconciliation, Truth and Justice மையத்தில் மூத்த துணை ஆய்வுப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
தமிழரான அவர் இலங்கையில் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பித்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்.
Alfred-ஐ போலவே, பன்முக கலாச்சார சமூகங்கள் நல்லிணக்கத்தில் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்று சங்கர் நம்புகிறார்.
SBS Examines-இற்காக Rachael Knowles, Nicola McCaskill மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.