SBS Examines : வதந்திகள், இனவாதம் மற்றும் வாக்கெடுப்பு

Referendum misinformation web banner.jpg

The referendum has made some Aboriginal and Torres Strait Islander people question their sense of belonging in Australia. Credit: Getty/Supplied

Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைந்து இப்போது, ஒரு வருடத்திற்குப் பிறகு பொய்யான மற்றும் தவறான தகவல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற கேள்வியெழுப்பப்படுகிறது.


இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அக்டோபர் 14, 2023 அன்று நடந்த முதல் கருத்து வாக்கெடுப்பில் பூர்வீகக் குடி மக்களுக்கு நாடாளுமன்றத்தில் Voice என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான திட்டம் தோற்கடிக்கப்பட்டது. 

அறுபது சதவீத ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் பூர்வீகக் குடி மற்றும் Torres Strait தீவு மக்களுக்கான Voice என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான முன்மொழிவுக்கு இல்லை என்று வாக்களித்தனர்.

Voice to Parliament என்ற கட்டமைப்பிற்காக பிரச்சாரம் செய்தவர் Tagalaka மற்றும் Gumatji மனிதர் Conor Bowden.

பிரச்சாரங்கள் தொடங்கியவுடன், தவறான தகவல் பரவுவதை Conor அவதானித்துள்ளார். Voice to Parliament என்ற கட்டமைப்பை விளக்கும் காணொளிகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவேற்றுள்ளார். 

இதன் மூலம் ஒரு சிலரின் மனதை அவர் வென்றாலும், அது தனிப்பட்ட முறையில் அவரை பாதித்துள்ளது.

பொதுவாக்கெடுப்பு முடிவு சிலருக்கு பாகுபாடு காட்ட அதிகாரம் அளித்ததாக பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு சமூக நீதி ஆணையர் Katie Kiss நம்புகிறார்.

அக்டோபர் 14 அன்று நடந்த வாக்கெடுப்பு தோல்விக்குப் பிறகு உரை ஆற்றிய , பூர்வீக ஆஸ்திரேலியர்களுக்கான அமைச்சரும், Wiradjuri பெண்ணுமான லிண்டா பர்னி, தோல்வி முடிவாக இருந்தபோதிலும் நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை உள்ளது என்று அறிவித்தார்.

SBS Examines- இற்காக ஆங்கிலத்தில் Rachael Knowles தயாரித்த விவரணத்தை தமிழில் வழங்கியவர் செல்வி

மேலும் அறிய www.sbs.com.au/sbsexamines -ஐ பார்வையிடவும்.



SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand