ஆஸ்திரேலியாவுக்கான தற்காலிக வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது இலகுவாக்கப்பட்டுள்ளது!

AAP

AAP Source: AAP

இம்மாதம் முதல் ஆஸ்திரேலியாவுக்கான தற்காலிக வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது இலகுவானதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


இம்மாதம் முதல் ஆஸ்திரேலியாவுக்கான தற்காலிக வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது இலகுவானதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 19ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் விசா விண்ணப்ப நடைமுறையை மிகவும் இலகுவாக்கும் என ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஏற்கனவே இருந்த 7 விசா உபபிரிவுகள் புதிய 4 பிரிவுகளின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

short-term specialist temporary work, temporary activity, training and international relations ஆகியனவே இப்புதிய 4 பிரிவுகளில் அடங்குகின்றன.

குடிவரவுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட 2014 Skilled Migration and Temporary Activity Review  அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் இது தமது பணிச்சுமையை பெரிதும் குறைக்கும் எனவும் சொல்கிறார் குடிவரவுத் திணைக்களத்தைச் சேர்ந்த Alex Hawke.

இதுவரை காலமும் இருந்த காகிதப் படிவ முறைமை மாற்றப்பட்டு ImmiAccount  ஊடாக இணையம் மூலம் மட்டுமே இப்புதிய விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

புதிய பிரிவான Subclass 400 Temporary Work (Short Stay Specialist) விசாவானது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான தற்காலிக வேலை விசாவாகும்.

அதேநேரம் Subclass 408 Temporary Activity visa பிரிவானது கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு, சமயம் சம்பந்தமான வேலைகள் உட்பட பல்வேறு தேவைகளின் நிமித்தம் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கான தற்காலிக விசாவாகும்.

sbs
Source: SBS

புதிய Subclass 407 Training visa குறுகிய கால தொழில்சார் பயிற்சிநெறிகளை மேற்கொள்பவர்களுக்கானது.

மற்றும் Subclass 403 Temporary Work (International Relations) விசாவானது இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்றின்கீழ் பணிபுரிபவர்கள், இரண்டாவது மொழி ஒன்றைக் கற்பிப்பவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகளின் கீழ் பணிபுரிபவர்கள் உள்ளிட்டவர்களுக்கானது.

இதேவேளை நவம்பர் 19ம் திகதிக்கு முன்னர் தற்காலிக வேலை விசாக்கள் எதற்காவது விண்ணப்பித்தவர்களின் விசா விண்ணப்பங்கள் முன்பிருந்த நடைமுறையின்படியே பரிசீலிக்கப்படுமென குடிவரவுத் திணைக்களத்தைச் சேர்ந்த Alex Hawke சொல்கிறார்.

மேலதிக விபரங்களுக்கு http://www.border.gov.au/Trav/Work/temporary-activity-visa-changes என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now