கற்றலோனியர்கள் தனிநாடு கோரி, ஸ்பெய்ன் நாட்டிலிருந்து சுதந்திரம் கேட்டு நிற்பது நேயர்கள் அறிந்த செய்தி. கற்றலான் தலைவர்கள் ஒருதலைப்பட்சமாக, தமது சுதந்திரத்தை நாளை அறிவிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கற்றலோனியா, தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெய்ன் பிரதமர் எச்சரித்துள்ளார். ஒற்றுமையை வேண்டியும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பல்லாயிரக்கணக்கான ஸ்பானிய மக்கள் தெருக்களில் இறங்கி ஊர்வலங்களை நடத்தியுள்ளார்கள். இது குறித்து Christine Kearney தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
கற்றலோனியா குறித்தும் அதன் சுயநிர்ணய உரிமை குறித்தும் பின்னணி என்ன என்று அறிந்து கொள்ள, பின்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்: அடுத்த தனி நாடு கற்றலோனியா?
Share





