SBS Examines Dubbo-விற்கு பயணம் செய்து Dubbo புறநகர் சமூக ஒற்றுமையை எவ்வாறு முன்னெடுத்து வருகிறது என்பதை ஆய்வு செய்கிறது.
சனிக்கிழமை காலை 10 மணி, குடிபெயர்ந்த குடும்பங்கள் பிள்ளைகளுக்கான playgroup விளையாட்டு குழுவில் கலந்து கொள்ள Buninyong அரசு பாடசாலையில் கூடுகின்றனர்.
இந்த Playgroup-ஐ Lorna Brenan நடத்துகிறார் மற்றும் Dubboவில் உள்ள குடியேறிய சமூகத்திற்கான முக்கியமான தொடர்பு நபராகவும் உள்ளார்.
Lorna நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஸ்காட்லாந்திலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்.
தான் முதலில் Dubbo-வில் குடியேறிய போது இனவெறி இருப்பதை உணர்ந்ததாகவும் ஆனால் அது காலபோக்கில் தற்போது மாறிக்கொண்டிருப்பதாக Lorna கூறுகிறார்.
Anuadha Khadka - நேபாள மொழிப் பாடசாலையின் முதல்வராக உள்ளார். குழந்தைகளுக்கு மொழி மற்றும் பண்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டிய முழுப்பொறுப்பையும் பெற்றோர்களின் மேல் சுமத்தாமல், அதை பகிர்ந்து கொள்வதற்கு இந்த மொழி பாடசாலை உதவுகிறது என அவர் கூறுகிறார்.
Dubbo நேபாள சமூகத்தின் தலைவரான ராஜீவ் பட்டாராய் நேபாள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறார்.
இந்த கொண்டாட்டத்தில் கார்கி கங்குலியும் கலந்துக்கொண்டுள்ளார். அவர் ORISCON அமைப்பின் தலைவராக உள்ளார். Dubbo வில் குடியேறிய பின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதில் உள்ள சிரமங்களை கார்கி ஒப்புக்கொண்டாலும், Dubbo வளர்ச்சியடைந்து வருவதாகவும் மற்றும் வளமான சமூகமாக மாறிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.